பிரதமர் மோதிக்கு முதல்வர் விஜய் எழுதிய முதல் கடிதம் – விவசாயிகள் சங்கம் எதிர்ப்பது ஏன்?

Share

ஜவுளி, பருத்தி, ஆடை, தமிழ்நாடு

பட மூலாதாரம், TNDIPR

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதிய முதல் கடிதத்தில் பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தியிருந்தார்.

இந்த அறிவிப்பை ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் நூற்பாலை நிறுவனங்கள் வரவேற்கின்றனர்.

ஆனால் இந்தக் கோரிக்கை பருத்தி விவசாயிகளைப் பாதிக்கும் எனக் கூறும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முதலமைச்சர் விஜயின் கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல

X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

கடந்த மே 14-ஆம் தேதி, பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருந்தார். பிரதமர் மோதிக்கு நேரடியாக அவர் எழுதும் முதல் கடிதம் இது.

அந்தக் கடிதத்தில், “அண்மைக் காலமாக, பருத்தி விலை உயர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நூல் விலை உயர்வால் இத்தொழில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டில் பருத்தி உற்பத்திக் குறைவு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் அதிகரிப்பு ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்களாகும்.”

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com