பஹல்காம் தாக்குதல்: சென்னை விமான நிலையத்திற்கு போலி மின்னஞ்சல் – என்ன நடந்தது?

Share

பஹல்காம் தாக்குதல்: சென்னை விமான நிலையத்திற்கு போலி மின்னஞ்சல்

பட மூலாதாரம், Getty Images

இன்றைய (05/05/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

சென்னையில் விமானத்தில் தீவிரவாதிகள் தப்பிச் செல்வதாக போலி இமெயில் அனுப்பியது யார் என இணையக் குற்ற காவல்துறையினர் விசாரணை என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புவுக்குச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் தப்பிச் செல்வதாக சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது.

இதனைத் தொடர்ந்து கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானத்தில் வந்த அனைத்து பயணிகளும் தனித்தனியாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால் அதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com