நெல்லை: டேங்கர் லாரியும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் பலியான சோகம்! | two youths died on the spot as a tanker lorry collided with the bike

Share

டேங்கர் லாரி மோதியதால் இருவரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். அதில், வரதராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த அடியுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சாமராஜ், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடத்தில் கிடக்கும் உடல்

விபத்து நடந்த இடத்தில் கிடக்கும் உடல்

இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்து காரணமாக நண்பர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சக ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இது குறித்து திசையன்விளை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com