நூற்றுக்கணக்கான பாரம்பர்ய நெல் ரகங்கள்; புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் இயற்கை விவசாயி! | hundreds of traditional rice varieties; An organic farmer who makes Puducherry proud!

Share

இணை பேராசிரியர் டாக்டர் ஆனந்தகுமார் பேசுகையில்,

“மரபு சாரா ஆராய்ச்சியில் இயற்கையாகவே ஆர்வம் கொண்ட பாஸ்கர், இயற்கையான மகரந்த சேர்க்கை வாயிலாக அல்லது கலப்பினமாக தோன்றிய புதுமையான வடிவமைப்புகள்  கொண்ட இதுவரை அறியப்படாத சுமார் 100-க்கும் மேற்பட்ட மரபு நெல் ரகங்களை தேர்வு மூலம் அடையாளம் கண்டு, ஒவ்வொன்றையும் தனிமைபடுத்தி, பராமரித்து, அவற்றின் குணங்களை கூர்ந்து கவனித்து, தனித்துவத்தை ஆய்வு செய்து, பாதுகாத்து வருகிறார். அவர் கண்டறிந்த புதுமையான நெல் ரகங்களுக்கு தனது பெயரையே சூட்டிக்கொள்ளாமல், நெல்லப்பர் 1, 2, 100 என வரிசையாக பெயரிட்டு பாதுகாத்து வருகிறார். இந்த நெல்லப்பர் ரகங்கள் காரைக்காலின் தட்ப வெப்பநிலை, மண், தண்ணீர் ஆகியவற்றிற்கு பொருந்தும் வகையில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார். அவை தேசிய பல்லுயிர் பாதுகாப்புச் சட்டப்படி ஆவணமாக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும்.

பாரம்பரிய நெல் ரகங்கள்

பாரம்பரிய நெல் ரகங்கள்

அவற்றை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தி காரைக்காலுக்கு ஏற்ற நெல் ரகங்களை உருவாக்கலாம். புதுச்சேரி மாநிலத்திற்கும் பெருமை சேர்த்த பாஸ்கரின் பண்ணை ஒரு `பல்லுயிர் பாதுகாப்பு மரபணு வங்கி ‘ உணவு, நுண்ணூட்டம், மற்றும் விதை பாதுகாப்பை உறுதி செய்து, நாடு தன்னிறைவு பெற ஏதுவாக பாஸ்கர் தனது பங்களிப்பை நிலைநாட்டியுள்ளார்” என்றார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com