டி.சி.எஸ் பெண் ஊழியர்களை முஸ்லிமாக மாற்ற முயற்சி: துப்புரவு தொழிலாளியாக சேர்ந்து கண்டுபிடித்த போலீஸார் | Attempt to Convert Female TCS Employees to Islam: Police Uncover Plot by Posing as Sanitation Workers-

Share

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீஸ் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக 8 பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 9 வழக்குகள் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது. இது தொடர்பாக குழு தலைவர்கள் (TLs) கைது செய்யப்பட்டுள்ளனர். இப்புகார்கள் குறித்து விசாரிக்க மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அக்குழு நடத்திய விசாரணையில் பெண் ஊழியர்களை தவறான முறையில் தொடுதல், பின்தொடருதல் மற்றும் ஆபாசமான கருத்துக்களைக் கூறுதல் போன்ற செயல்கள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதோடு ஊழியர்களை இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தி இருக்கின்றனர்.

சில ஊழியர்களை மாட்டிறைச்சி உண்ண கட்டாயப்படுத்தியதாகவும், பெண்களை புர்கா அணிய வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தபோது, நிறுவனத்தின் மனிதவள மேலாளர் (HR) அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவற்றை மறைக்க முயன்றுள்ளார். அதோடு அவரும் இக்குற்றச்சாட்டுக்கு துணைபோய் இருக்கிறார். விசாரணை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலங்கள் மூலம் மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

குற்றம்சாட்டப்பட்ட ஆறு குழுத் தலைவர்கள் மற்றும் மனிதவள நிர்வாகி நிதா கான் ஆகியோர், சக ஊழியர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டி இருக்கின்றனர். அதோடு முறையற்ற பாலியல் அத்துமீறல்கள் மற்றும் இஸ்லாமிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறு தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வந்துள்ளனர்.

தங்கள் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் அவர்கள் பேசியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இப்புகாருக்கு உள்ளான குழுத் தலைவர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரி நிதா கான் தலைமறைவாகிவிட்டார். நிதா கான் ஊழியர்களை தேர்வு செய்வதில் முஸ்லிம்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்துவந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதமே இது தொடர்பாக போலீஸாரின் கவனத்திற்கு வந்தது. உடனே உண்மையை தெரிந்து கொள்ள போலீஸார் நூதன முறையைப் பின்பற்றினர். நாசிக் டி.சி.எஸ் அலுவலகத்தில் தங்களது ஊழியர்கள் 4 பேரை அங்கு பணியாளர்களாக போலீஸார் சேர்த்துவிட்டனர். அந்த போலீஸார் அந்த அலுவலகத்தில் தூய்மை தொழிலாளர்களாகப் பணியாற்றி அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் பேசி உண்மையை படிப்படியாக தெரிந்து கொண்டனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com