சார்கோல் ஷவர்மாவின் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? மதுரை காளவாசலுக்கு போன ட்ரை பண்ணுங்க..!

Share

ஷவர்மால சிக்கன் ஷவர்மா, பன்னீர் ஷவர்மான்னு சாப்பிட்டு இருப்போம். ஆனால் சார்கோல் ஷவர்மா சாப்பிட்டு இருக்கிறீர்களா?

மதுரையிலேயே முதல் முதலாக காளவாசல் பைபாஸ் ரோட்டில் அன்லிமிடெட் ஆப்போசிட்ல இருக்கிற அரேபியன் நைட்ஸ் என்ற கடையில் தான் இந்த சார்கோல் ஷர்மாவை விற்பனை பண்ணிட்டு இருக்காங்க. சார்கோல் ஷவர்மா அப்படின்னா என்ன அப்படின்னா என்னன்னு தெரியணுமா? அதாவது சாதாரண ஷவர்மா அப்படின்னா சிக்கன் நல்லா ஹீட் பண்ணி ஹீட் ஷவர்மாவாக தருவாங்க. ஆனா சார்கோல் ஷவர்மா அப்படின்னா அதிகமான சார்கோல எடுத்து கங்கு வர வரைக்கும் தீ எரிய விட்டு அது மேல சிக்கன் ரோல வைத்துவிட்டால் சார்கோல் கங்கில் இருந்து வரும். ஸ்மோக் சிக்கனை வேகவைத்து தனி சுவையாக கிடைக்குமாம். இதைத்தான் சார்கோல் ஷவர்மா என்கிறார்கள்.

சார்கோல் ஷவர்மா

உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)

ஷவர்மா எப்போதும் செய்வதுபோல் சார்கோல் புகையில் வேக வைத்த சிக்கனை எடுத்து அதை ரொட்டி மேலே வைத்து சிறிது மயோனைசையும் கலந்து கொடுத்தால் சார்கோல் ஷவர்மா ரெடியாகி விடுகிறது. இந்த சார்கோல் ஷவர்மா 120 ரூபாய்க்கும் சார்கோல் பிளேட் ஷவர்மா 160 ரூபாய்க்கும் கொடுத்துக்கிட்டு இருக்காங்க.  மற்ற ஷவர்மாக்களை விட இந்த சார்கோல் ஷர்மாவிற்கு தனித்துவமான சுவை இருப்பதால் இந்த சார்கோல் ஷவர்மாவை நோக்கி மதுரை மக்கள் படையெடுக்கின்றனர்.

காளவாசல்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com