அதில் “கோவிட்-19 வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து நன்கு புரிந்துகொள்ள, நாங்கள் சில தரவுகளை சீனாவிடம் கேட்டுள்ளோம். நாங்கள் கோரிய தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு, சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹானில் இருந்து தோன்றிய SARS -CoV -2, மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவும் தன்மை கொண்ட சுவாச நோய்க் கிருமியாக முதலில் வெளிப்பட்டது எப்படி என்பது தீவிர விவாதத்திற்குரியது.
வைரஸின் தோற்றம் குறித்து வல்லுநர்கள் இரண்டு கோட்பாடுகளை முன்வைத்துள்ளனர். முதல் கோட்பாடு இந்தத் தொற்று இயற்கையான முறையில் விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவியிருக்கலாம். இரண்டாவது கோட்பாடு, ஆராய்ச்சி தொடர்பான சம்பவத்தின் விளைவாக இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்கி இருக்கலாம். கோவிட் தொற்றை உலகளாவிய அவசர சுகாதார நிலையாக அறிவிக்கும் சூழல் அடுத்த ஆண்டு இருக்காது” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.