கேரட் ரசமலாய், குலோப் ஜாமூன் சீஸ் கேக், சாக்லேட் ரசகுல்லா | ஸ்வீட் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ் | Carrot Rasamalai, Gulob Jamun Cheese Cake, Chocolate Rasgulla – weekend receipes

Share

ஃப்ரிட்ஜில் உள்ள புடிங் பவுலை வெளியே எடுக்கவும். இதன் மேல் பாதியாக்கிய குலாப் ஜாமூன்களை நெருக்கமாக அடுக்கவும். பிறகு க்ரீம் சீஸ் கலவையை குலாப் ஜாமூன்களின் மேல் சேர்த்து ஃப்ரிட்ஜில் ஆறு மணி நேரம் வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் மீதமிருக்கும் இரண்டு டீஸ்பூன் ஜெலட்டினை சுடுதண்ணீரில் ஊறவைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து முக்கால் கப் தண்ணீர் சேர்க்கவும். இத்துடன் மூன்று டேபிள்ஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை நன்கு கொதித்ததும் ஊறவைத்த 2 டீஸ்பூன் ஜெலட்டினை சேர்த்துக் கரையவிட்டு ஆறவிடவும். கலவை எல்லாம் ஒன்று சேர்ந்ததும் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த குலாப் ஜாமூன் கலவையில் ஜெலட்டின் கலவையை ஊற்றவும். பிறகு ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து குலாப் ஜாமூன் சீஸ் கேக்குகளை அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.

சாக்லேட் ரசகுல்லா

சாக்லேட் ரசகுல்லா

தேவையானவை:

கண்டென்ஸ்டு மில்க் – 140 மில்லி

பால் – ஒரு கப்

கோகோ பவுடர் – 4 டேபிள்ஸ்பூன்

வெனிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன்

பாதாம் பிஸ்தா, முந்திரி

அலங்கரிக்க) – சிறிதளவு

ரசகுல்லா – 12

செய்முறை:

ரசகுல்லாவை ஜீராவில் இருந்து பிழிந்து எடுத்து தனியாக வைக்கவும். அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து பாலைச் சேர்த்து, அதனுடன் கோகோ பவுடர், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, ரசகுல்லாவை கொதிக்கும் பால் கலவையில் சேர்த்து மூன்று நிமிடங்கள் வேகவிடவும். இத்துடன் வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கவும். சாக்லேட் ரசகுல்லா ஆறியதும் ஒரு பவுலில் ஊற்றி ஆறு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பாதாம், முந்திரி, பிஸ்தா தூவி ஜில்லென்று பரிமாறவும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com