`குலோப் ஜாமூன், ஜாங்கிரி, மைசூர் பாகு’ கிருஷ்ண ஜெயந்திக்கு 88 பட்சணங்கள் – வைரல் போட்டோவின் பின்னணி|krishna Jayanthi function celebration pictures goes viral

Share

கிருஷ்ண ஜெயந்தியை கிருஷ்ணருக்குப் பிடித்த பட்சணங்கள் செய்து கொண்டாடுவது இந்தியா முழுக்க வழக்கம். சீடை, அதிரசம், லட்டு, அப்பம், தட்டை, முறுக்கு என்று பட்சணங்களுடன் வெண்ணெயும் அவலும் வைத்து நம் இல்லங்களில் நைவேத்தியம் செய்து கொண்டாடுவார்கள். இவர் அதையும் தாண்டி ஏராளமாகச் செய்து அசத்தியிருக்கிறார்.  ‘பகவான் கிருஷ்ணர் மீதான அவரின் ஆழமான பக்தியைக் கண்டு நான் பெருமிதப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர் காமத். தன் பெயரையோ, பிற விவரங்களையோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத இந்தப் பெண்மணி, ஆண்டுதோறும் இப்படி நிறைய பட்சணங்கள் செய்து கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி 88 வகை பட்சணங்கள்

கிருஷ்ண ஜெயந்தி 88 வகை பட்சணங்கள்

கடந்த ஆண்டு 70 பட்சணங்களுடன் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடிய இவர், இந்த ஆண்டு அந்த சாதனையை முறியடித்துள்ளார்.  இந்த பட்சணங்களின் புகைப்படத்தைப் பார்க்கும் பலரும், ‘ஆதரவற்ற ஏழைகளின் பசியாற்ற இவர் இந்தப் பலகாரங்களைக் கொடுத்திருப்பார்’ என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com