கத்தார் தொழிற்சாலை வெடிப்பு விபத்து – உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினர் வேதனை

Share

கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த தமிழரான பபித்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த தமிழரான பபித்

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) இரவு ஏற்பட்ட விபத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பபித் (26), சஜித்குமார் (25), சுவின் (24) ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களது உடல்களை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொண்டுவருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கத்தாரின் ராஸ் லஃப்பானில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 66 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்றும் கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

‘தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட விபத்து’ என இதை விவரித்துள்ள கத்தாரின் உள்துறை அமைச்சகம், “காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் பணிகள் முடிவடைந்துள்ளன” எனத் தெரிவித்துள்ளது.

கத்தார் நாட்டின் தொழிற்துறை மண்டலத்தில் கடந்த 21ம் தேதி ஏற்பட்ட தீ விபத்து.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கத்தார் நாட்டின் தொழிற்துறை மண்டலத்தில் கடந்த 21ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது

‘ஒரே பகுதியைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு’

இந்த விபத்தில் இறந்த தமிழர்கள் மூவருமே திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com