‘இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு புத்தி சொல்லுங்க’ எம்ஜிஆர் சிலை முன் பிரமுகர் புலம்பல்

Share

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதிகளில் நேற்று அதிமுகவின் 51வது ஆண்டு விழாவையொட்டி ஆங்காங்கே கொண்டாட்டங்கள் நடந்தன. இதேபோல் காமராஜர் பாலம் அருகே உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அக்கட்சியினர் விழா நடத்தி தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். தலைவர்களின் சிலைகளுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் மற்றும் அமமுக அணியினர் என 3 குழுவினரும் தனித்தனியாக ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

அப்போது அங்கு வந்த அதேபகுதியை சேர்ந்த எம்ஜிஆர் ரசிகரும், முன்னாள் அதிமுக நகர செயலாளருமான புலிக்கேசன், எம்.ஜி.ஆர் சிலைக்கு தீபாராதனை செய்தார். அதன்பின்னர் மண்டியிட்டபடி திடீரென, ‘அதிமுகவில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் என தனித்தனியாக பிரிந்து கிடக்கின்றனர், இதனால் தொண்டர்களும் குழப்பத்தில் உள்ளனர். எனவே இபிஎஸ், ஓபிஎஸ் கனவில் வந்து அவர்கள் இருவருக்கும் புத்திமதி சொல்லுங்கள் தலைவா…’ எனக்கூறி புலம்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com