அமெரிக்கா: டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவால் கமலா ஹாரிசுக்கு சாதகமான சூழல் உருவாகுமா?

Share

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: கமலா ஹாரிஸுக்கு டெய்லர் ஸ்விஃப் ஆதரவு

  • எழுதியவர், மாரியான்னா ஸ்ப்ரிங்
  • பதவி, டிஸ்இன்பர்மேஷன் & சமூக ஊடக செய்தியாளர்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. இந்த சூழலில் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் ரசிகர் பட்டாளம் ஒருவருக்கு ஒருவர் அரசியல் பற்றிய புரிதலையும் அமெரிக்க தேர்தல் களம் குறித்த அறிவையும் பரிமாறிக் கொள்கின்றனர்.

29 வயதான நோயல் ட்ரேக் யுடாவில் வசிக்கிறார். சென்ற வருடம் வரை அவருக்கு அரசியல் பற்றிய அபிப்ராயம் குறைவாகவே இருந்துள்ளது.

2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் பெரிய ஆர்வத்துடன் வாக்கு செலுத்தவில்லை.

“ஆனால் ஸ்விஃப்டிகள் (Swifties – அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் ரசிகர்கள் தங்களை இவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்) நாங்கள் அரசியல் குறித்து ஆன்லைனில் ஒருவருடன் மற்றொருவர் உரையாடுகிறோம். இந்தத் தேர்தல் காலத்தில் நான் அரசியல் குறித்து பேசும் விதத்தை இந்த உரையாடல்கள் மாற்றியுள்ளன,” என்று பிபிசியிடம் கூறினார் நோயல்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com