Doctor Vikatan: உடல் உழைப்பு உள்ளவர்களுக்கும் நீரிழிவு பாதிப்பது ஏன்? | Doctor Vikatan: Why does diabetes affect people who are physically active?

Share

டைப் 1, டைப் 2, டைப் 1 ஏ, MODY (Maturity Onset Diabetes of Young), LADA (Latent Autoimmune Diabetes in Adults) என நீரிழிவில் 5 வகைகள் உள்ளன. இதில் எந்தவகையான நீரிழிவு யாருக்கு, எப்போது வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருவருக்கு நீரிழிவு பாதித்த பிறகுதான் அவருக்கு வந்துள்ளது எந்த வகை என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

நீரிழிவு வராமல் பாதுகாப்பதில் நம் உணவுமுறைக்குதான் முதலிடம். அப்படியானால் நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடலுழைப்பு உதவாதா என்று கேட்க வேண்டாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அடிப்படையாக வலியுறுத்தப்படும் சரிவிகித உணவுப் பழக்கம், உடலுழைப்பு போன்றவை எல்லோருக்கும் அவசியம்தான். நீரிழிவு வந்தபிறகும் இதே விதிகள் பொருந்தும். அதாவது, சரிவிகித உணவுப் பழக்கமும் முறையான உடற்பயிற்சிகளும் பின்பற்றப்பட்டால்தான் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com