DASH டயட்… ஹைப்பர் டென்ஷன், இதய நோய்களில் இருந்து பாதுகாக்க உதவும் இந்த உணவுமுறை பற்றி தெரியுமா.?

Share

சமீப காலமாக வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினருமே இதய நோய், ஹைபர் டென்ஷன் என்று தீவிரமான உடல்நல பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதற்கு உணவு பழக்க முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் DASH Diet என்று கூறப்படும் ஒரு பிரத்தியேகமான டயட்டை பின்பற்றினால் ஹைபர்டென்ஷன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்; அதே போல அதனால் ஏற்படும் இதய நோய்களையும் தடுக்க முடியும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. Dash diet (Dietary Approaches to Stop Hypertension) பற்றிய ஆய்வு, அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிரிவென்டிவ் மெடிசின் என்ற ஜர்னலில் வெளியாகி இருக்கிறது.

டாஷ் டயட் 75 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படக்கூடிய ஹைப்பர் டென்ஷனை குறைத்து இதயம் செயலிழப்பை தடுக்கிறது.

சரி, இந்த டயட்டில் என்ன உணவுகள் உள்ளன என்று பார்த்தால், பிரஷ்ஷான காய்கறிகள், பழங்கள், லீன் மீட், குறைவான கொழுப்பு கொண்ட பால் பொருட்கள், மைக்ரோ பிரியன்ட் நிறைந்த உணவுகள் ஆகியவை இருக்கின்றன. இதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால் தினசரி உட்கொள்ளக்கூடிய சோடியத்தின் அளவு 1500 எம்ஜிக்கு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . இந்த உணவுகளின் கலவை தான் டாஷ் டயட் என்று கூறப்படுகிறது.

டாஷ் டயட்டில் என்ன உணவுகள் அதிகம் சாப்பிடலாம், எதைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம் :

  • உப்பு அல்லது சோடியம் அதிகமுள்ள உணவுகள், உணவு ரசாயனங்கள், பிரசர்வேட்டிவ்கள் போன்றவற்றைத் குறைக்கவும், தவிர்க்கவும் வேண்டும்.
  • அதிக அளவில் முழு தானியங்கள், ஃபிரெஷ்ஷான காய் மற்றும் பழங்கள், மீன், கொட்டைகள், விதைகள், கொழுப்பு நிறைய இல்லாத இறைச்சி போன்றவற்றை சாப்பிடலாம்.
  • பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், பிராசஸ் செய்யப்பட்ட இறைச்சி / உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி / உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  • உணவுகள் மட்டுமில்லாமல், பதார்த்தங்கள், டிப், சாஸ் உள்ளிட்டவற்றில் குறைவான சோடியம் மற்றும் சோடியம் இல்லாதவற்றை மட்டுமே தேர்வு செய்யவேண்டும்.
  • பாப் கார்ன், ஓட மீல், முழு கோதுமை பிரெட், பருப்பு, பயறுகள், பிரவுன் அரிசி ஆகியவை உடலுக்குத் தேவையான நார்ச்சத்து அனைத்தையும் கொடுக்கும்.
  • காய்கறிகளில் இருந்து உங்களுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை கிடைக்கும். அதே நேரத்தில், காய்கறிகள் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவான உணவுகளாகும். ரத்த அழுத்தத்தை குறைக்க அதிக காய்கறிகளை உணவில் சேர்க்கலாம்.
  • இதயத்தை பாதுகாக்கும் வைட்டமின்கள், நார்ச்சத்து மட்டுமில்லாமல், பொட்டாசியம் மற்றும் மக்னீஷியம் ஆகிய மினரல்களும் உள்ளன. இவை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
  • மக்னீசியம், ஜின்க், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை கொட்டைகள், விதைகள் மற்றும் பயிறு வகைகளில் அதிகம் உள்ளன.

இந்த டயட்டை பின்பற்றுவதால் இதயம் செயலிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் பாதியாக குறையும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. அதுமட்டுமில்லாமல் இதய நோய்க்காக வழங்கப்படும் மருந்துகளை விட சிறப்பாக செயல்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹைபர் டென்ஷனுக்காக மற்றும் ஹார்ட் ஃபெயிலியர் மட்டுமல்லாமல் டாஷ் டயட்டை பின்பற்றினால் நீங்கள் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். ஆனால், அதே நேரத்தில் நீங்கள் இந்த டயட்டை பின்பற்றுவதன் மூலம் ஹைப்பர் டென்ஷனுக்காக அல்லது அதிக ரத்த அழுத்தம் அல்லது இதய நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. மருந்துகளையும் உட்கொண்டு, டயட்டையும் பின்பற்றினால் நோயின் தீவிரம் குறையும், நோய் ஏற்படாமல் தடுக்க முடியும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

Also Read | Sattvic Diet: எடை குறைக்க சாத்விக உணவு முறையை எல்லாரும் பின்பற்றலாமா? பயன் உண்டா?

அதிக ரத்த அழுத்தம் இருக்கும் நோயாளிகளுக்கு டாஷ் டயட் பரிந்துரை செய்யப்படுகிறது : 

டாஷ் டயட்டில் அதிக பட்சமாக காய்கறிகளும் மற்றும் பழங்களும் சாப்பிட வேண்டும். எனவே பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடும் போது உடலின் பொட்டாசியம் லெவல் அதிகரித்து அது தானாகவே ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். எனவே குடும்பத்தில் ஹைபர்டென்ஷன் பாதிப்பு யாருக்காவது இருந்தாலோ அல்லது ஏற்கனவே அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த டயட்டை பின்பற்றினால் ரத்த அழுத்தத்தின் அளவை குறைத்து இதய நோய் வராமல் தடுக்க முடியும். அதுமட்டுமில்லாமல் டாஷ் டயட் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், கவுட் மற்றும் அல்சைமர் போன்ற காக்நிடிவ் இயக்கங்கள் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் போன்றவற்றைத் தடுப்பதற்காகவும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் புதிதாக எந்த ஒரு டயட்டை நீங்கள் பின்பற்றத் தொடங்கினாலும் உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com