உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் கெஷோர்ன் வால்காட் தங்கப் பதக்கம் வென்றார் | World Athletics Championships keshorn Walcott wins gold in javelin throw

டோக்கியோ: உலக தடகள சாம்​பியன்​ஷிப்​பின் ஈட்டி எறிதலில் டிரினி​டாட் மற்​றும் டோபாகோ வீரர் கெஷோர்ன் வால்​காட் தங்​கப் பதக்​கம் வென்​றார். நடப்பு சாம்​பியன் அந்​தஸ்​துடன் களமிறங்​கிய இந்​தி​யா​வின் நீரஜ் சோப்ரா 8-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார். அதேவேளை​யில் மற்​றொரு இந்​திய வீர​ரான சச்​சின் யாதவ் 4-வது இடம் பிடித்து கவனம் ஈர்த்​தார். உலக தடகள சாம்​பியன்​ஷிப் போட்டி ஜப்​பானின் டோக்​கியோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று ஆடவருக்​கான ஈட்டி எறிதலில் இறு​திப் போட்டி நடை​பெற்​றது.…

ரோபோ சங்கர்: சிறு கதாபாத்திரத்திலும் கவனம் ஈர்க்கும் கலைஞராக உருவானது எப்படி?

பட மூலாதாரம், X/@SimranbaggaOffcபடக்குறிப்பு, நடிகர் ரோபோ சங்கர் வியாழக்கிழமை மாலை உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 46. கட்டுரை தகவல்ரோபோ சங்கர் மிகக் குறைவான திரைப்படங்களிலேயே நடித்திருந்தாலும், தான் ஏற்ற பாத்திரங்களுக்கு வித்தியாசமான நடிப்பைக் கொடுத்து கவனிக்க வைத்தவர். குழந்தைகளாலும் ரசிக்கப்பட்டவர்.தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களுக்கு என ஒரு நீண்ட பட்டியல் உண்டு. சினிமா தமிழ் பேச ஆரம்பித்த சில ஆண்டுகளிலிருந்தே நகைச்சுவை நடிகர்களின் ஆதிக்கமும் துவங்கியது. காளி என். ரத்தினத்தில் துவங்கி…

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறியிருக்கிறார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. TOKYO, NEERAJ CHOPRA FINISHED 8TH AT WORLD C’SHIP 2025

உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 தொடரில், ஈட்டி எறிதல் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, முதலில் நடந்த தகுதிச் சுற்றில் ஈட்டியை 80 மீட்டருக்கும் அதிகமாக எறிந்து, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதேபோல பாகிஸ்தானின் அர்ஷாத் நதீமும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.நீரஜ் சோப்ரா, பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவிற்கும், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால்,…

ரோபோ சங்கர் மறைவு: “கலைஞர்கள் தங்கள் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும்” – தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் | Actor Robo Shankar Passes Away: Tamilisai Soundararajan Urges Artists to Prioritize Health

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரமான ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் இன்று (செப் 17) உயிரிழந்துள்ளார்.46 வயதான ரோபோ சங்கர், மஞ்சள் காமாலை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்த நிலையில், மீண்டும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கல்லீரல் மற்றும் சீறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் அவர்…

வாழ்நாள் ஃபார்மில் இருக்கும் ஃபில் சால்ட்: அயர்லாந்தை ஊதிய இங்கிலாந்து | Phil Salt, who is in the form of a lifetime, said: England beat Ireland

இங்கிலாந்தின் புதிய கேப்டன் ஜேக்கப் பெத்தல் இங்கிலாந்தின் டி20 அத்தியாயத்தை அட்டகாசமான வெற்றியுடன் தொடங்கியுள்ளார். அயர்லாந்துக்கு எதிராக டப்ளினில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 197 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கின்றது. பெத்தல் தன் கேப்டன்சியை அற்புதமாகத் தொடங்கியது எப்படி தெரியவருகிறதெனில் டாஸ் வென்று பசுந்தரை பிட்சில் அயர்லாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தார். முதலில் பேட் செய்த அயர்லாந்தும்…

மயிலாடுதுறை: காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் கொலைச் சம்பவத்தின் பின்னணி என்ன?

படக்குறிப்பு, வைரமுத்துகட்டுரை தகவல்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வைரமுத்து என்ற தலித் இளைஞர் கொல்லப்பட்டதாக, செப்டெம்பர் 17 அன்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.ஒரே சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதற்கு முடிவெடுத்ததால் பட்டியல் சாதி இளைஞர் கொல்லப்பட்டாரா? பின்னணி என்ன?மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமத்தில் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்துவும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.டிப்ளமோ படித்துள்ள வைரமுத்து,…

“2017 ஆம் ஆண்டு நான் ஓய்வு பெற்றப் பிறகு என் வாழ்க்கை முறையே மாறிவிட்டது”- உசைன் போல்ட் |usain-bolt-life-changed-after-retirement-in-2017

ஒலிம்பிக் தடகளப்போட்டிகளில் சாதனைப் படைத்த உசைன் போல்ட் தற்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனைப் படைத்துள்ள இவர், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம் வென்று உலக சாதனை படைத்திருக்கிறார். உசைன் போல்ட் 100 மீட்டரை வெறும் 9.58 நொடிகளில் கடந்து அசத்தியிருக்கிறார். “மின்னல் வேக மனிதன்’ என்று அழைக்கப்பட்ட உசைன் போல்ட் 2017ல் சர்வதேச…

SSVM டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் மாநாடு கருத்தரங்குகள். கலாச்சார நிகழ்வுகள்.உயரிய விருதுகள்

இந்திய AI வேண்டுகோள்திரு. ஜிபு எலியாஸ் (AI நெறிமுறையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்): “தற்போது AI மொழி மற்றும் கலாச்சார குறைபாடுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பிரதிபலிக்கும் ஒரு இந்திய AI-ஐ உருவாக்க வேண்டும்” என்றார்.  விளையாட்டுகளில் AIதிரு. பிரகாஷ் படுகோன் (முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரர்): “விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி, வீடியோ பகுப்பாய்வு, ஊட்டச்சத்து திட்டமிடல் போன்ற அம்சங்களில் AI பெரிதும் உதவக்கூடும். ஆனால், அதைப் பயன்படுத்தி மனிதர்கள்தான் விளையாட்டுப் போட்டிகளில் வெல்ல வேண்டும்” என்றார். மாணவர் தொழில்முனைவோர் விருதுகள்…

பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்ட ஐசிசி மேட்ச் ரெஃப்ரீ பைகிராஃப்ட்! | ICC match referee Andy Pycroft apologizes to Pakistan captain and manager

ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐசிசி ஆட்ட நடுவருமான ஆண்டி பைகிராப்ட் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் மேனேஜரிடம் மன்னிப்புக் கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சர்ச்சைகளை கிளப்பிய கைகுலுக்கல் விவகார இந்தியா – பாகிஸ்தான் மேட்சில் ஆட்ட நடுவராக இருந்தவர் ஆண்டி பைகிராஃப்ட். நேற்று யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் களமிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது, ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராப்ட்டை…

இந்தியாவின் செயலுக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்ட நடுவர்?; யுஏஇ-க்கு எதிரான போட்டி தாமதமாக காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஆண்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகிறது15 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் மற்றும் கேப்டனிடம் ஐசிசி (இந்திய கிரிக்கெட் கவுன்சில்) போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கூறியதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், ஐசிசி இதுவரை இது குறித்து எந்த செய்தியும் குறிப்பிடவில்லை.ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, இரு அணிகளின்…