சுனில் கவாஸ்கர் #AppExclusive
யார் செய்த புண்ணியமோ, நமக்கு ஒரு கவாஸ்கர் கிடைத்திருக்கிறார். இதற்கு முன் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எத்தனையோ ஆட்டக்காரர்கள் இருந்திருக்கிறார்கள். இன்னும் எத்தனையோ பேர் உருவாக இருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் கவாஸ்கர் தனித்து நிற்கிறார். அவரோடு ஒப்பிடக் கூடிய வகையில் எந்தப் பெயரும் நம் நினைவிற்கு வருவதில்லை. தான் பெருமை சேர்த்துக் கொள்வதற்காக மட்டும் கவாஸ்கர் ஆடுவதில்லை. தாய்நாடு பெருமை இழந்துவிடக்கூடாது என்ற நினைப்பிலேயே விளையாடுகிறார். சக ஆட்டக்காரர்கள் எதிர்முனையில் வெளிநடப்புச் செய்துகொண்டே இருந்தாலும் இவர் மறு முனையில்…









