ஜனாதிபதி தேர்தலில் போட்டி ஜெகன்-சந்திரபாபுவிடம் முர்மு ஆதரவு கோரினார்
திருமலை : தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்று ஆதரவு திரட்டினார். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு. இவர், ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெறுவதற்காக முதல்வர் ஜெகன்மோகன் இல்லத்திற்கு நேற்று வந்தார். பின்னர் முதல்வர் ஜெகன்மோகன் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற திரவுபதி முர்முவுக்கு விஜயவாடா கனக துர்கையம்மன் கோயில் பிரசாதம், புகைப்படம் வழங்கி …








