Browsing: விளையாட்டு

T20 உலகக்கோப்பை IND vs USA: நெருக்கடியிலிருந்து இந்தியாவை மீட்ட சூர்யகுமார் யாதவ் பேச்சு|Calm Under Fire: Suryakumar Yadav’s Knock Seals IND vs USA

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங்க் படேல், சூழ்நிலையை கணித்து பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு இந்திய டாப் ஆர்டர் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர். சூர்யகுமார்‌ யாதவ்பவர் பிளே முடிவில்…

'கெத்து' சூர்யா; சுவாரஸ்யம் கூட்டிய அமெரிக்கா! – முதல் போட்டியை எப்படி வென்றது இந்தியா?

டி20 உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டமென்றாலும் போட்டி இந்தியா vs இந்தியா என்பதைப் போன்றே இருந்தது. அமெரிக்க அணியில் அத்தனை இந்தியர்கள். பலருக்கும் மும்பைதான் சொந்த ஊர். வான்கடேவில்தான் கிரிக்கெட்டே பயின்றிருக்கிறார்கள். அதனால்தானா என்னவோ இந்திய அணியை அத்தனை எளிதாக வெல்ல விடவில்லை. இயன்றளவுக்கு சவால் அளித்தார்கள்.Ind vs USAஇந்திய அணியின் கேப்டன் சூர்யகுமாரின் அட்டகாசமான இன்னிங்ஸ் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது. டாஸை அமெரிக்க கேப்டன் மோனாங் படேல்தான்…

பாகிஸ்தான் vs நெதர்லாந்து – உலகக் கோப்பை தொடக்க ஆட்டமே பரபரப்பு

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியே ரசிகர்களை நாற்காலியின் நுனிக்கே கொண்டு வந்துவிட்டது. கொழும்பில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து நெதர்லாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.தொடர்ந்து முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள், பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் வேகமும் துல்லியமும் நிறைந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து…

U19 World Cup : தீபேஷ், அம்ப்ரிஷ்!உலகக்கோப்பை அணியில் ஜொலித்த தமிழ்நாட்டு தங்கங்கள்! – யார் இவர்கள்?

தமிழ்நாட்டில் இருந்தும் இந்திய அணிக்குத் தொடர்ந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சர்வதேச அளவில் ஜொலித்து வருகிறார்கள். அந்த வரிசையில், சமீபத்தில் முடிந்த U-19 உலகக்கோப்பை தொடரில் தங்களின் முக்கியமான பங்களிப்பை அளித்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்கள் வேகப்பந்து வீச்சாளர் தீபேஷ் மற்றும் ஆல்ரவுண்டர் R.S. அம்ப்ரிஷ்.தீபேஷ் தேவேந்திரன்தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன், தனது அசத்தலான பந்துவீச்சுத் திறமையால் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி கவனம் பெற்றார். அதன் பலனாக, தமிழ்நாடு பிரீமியர்…

T20 WC: 2007 முதல் 2024 வரை! – ICC டி20 உலகக்கோப்பை வரலாறு – ஓர் பார்வை | ICC T20 World Cup History – An Overview

2016 – கடைசி ஓவரில் கரீபியன் மந்திரம்!2016 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியா டி20 உலகக் கோப்பையை நடத்தியது. இந்தத் தொடரின் அரைஇறுதியில், கோலி தலைமையிலான இந்திய அணி 193 ரன்கள் என்ற வலுவான இலக்கை உருவாக்கின. ஆனால், லெண்டில் சிம்மன்ஸின் அதிரடி ஆட்டம், கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் கனவுகளை சிதைத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப்போட்டிக்குக் கொண்டு சென்றது.இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டி20 உலகக் கோப்பையை மீண்டும் கைப்பற்றி, ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தது. கடைசி ஓவரில் கரீபியன் மந்திரம்2021…

T20 WC: "வங்கதேசத்திடம் சொன்னதுபோல் இந்தியாவிடம் ஐசிசி சொல்லுமா?" – நாசர் ஹுசைன் கேள்வி

டி20 உலகக்கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7 ஆம் தேதி இந்​தியா மற்றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. முஸ்தபிசுர் ரஹ்மானை ஐபிஎலில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி வங்கதேச அணி, “இந்தியாவில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை” என்று கூறி இலங்கையில் விளையாட அனுமதி கோரியது. விலகிய வங்கதேச அணிஆனால் ஐசிசி அந்தக் கோரிக்கையை நிராகரிக்க டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேச அணி கடைசி நேரத்தில் இந்தத் தொடரில் இருந்து விலகியது.…

IND vs ENG: அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்ற இந்திய அணி| India wins Under-19 World Cup 2026

விக்கெட்களை இழந்த இங்கிலாந்து…இதன் மூலம் இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் எடுத்தது.இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சில் திணறி ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்தது. தொடக்கத்திலிருந்து பொறுமையாக விளையாடிய பென் டவ்கின்ஸ் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.பின்னர் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. சூர்யவன்ஷிசாதனைப் படைத்த இந்திய அணி! நம்பிக்கை அளிக்கும் வகையில் காலேப் ஃபால்கனர்…

U19 World Cup: 15 சிக்ஸ்,15 பவுண்டரி,175 ரன்கள் – அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; குவியும் பாராட்டுகள்| Suryavanshi delivers a stunning performances in u19 worldcup

யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை விளாசி சாதனைப் படைத்திருக்கிறார்.யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார். வைபவ் சூர்யவன்ஷிஇதன்பின் தொடக்க வீரராக வைபவ் சூர்யவன்ஷி – ஆரோன் ஜார்ஜ் கூட்டணி ஆடியது.இதில் ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில்…

WPL 2026: '2வது முறை சாம்பியன்' – RCB சாதனை! தொடரும் டெல்லி அணியின் 'பைனல்' சோகம்

மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் 2026-ம் ஆண்டுக்கான இறுதிப்போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி அபார வெற்றி பெற்றது.இதன் மூலம் டெல்லி அணி தொடர்ச்சியாக நான்காவது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.போட்டியின் ஆரம்பத்தில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா பௌலிங்கைத் தேர்வு செய்தார். முதலில் களம் புகுந்த டெல்லி அணிக்கு லிசெல் லீ மற்றும் சஃபாலி வர்மா…

T20 World Cup: 20 அணிகள்; இந்தியாவில் 5 மைதானங்கள்; ஜியோ ஸ்டார் ஒளிபரப்பு – உலகக்கோப்பை முழு விவரம்| Details about ICC T20 World Cup

பங்கேற்கும் 20 அணிகள்…மொத்தம் 55 போட்டிகள் கொண்ட இந்தத்  தொடரில், 20 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற முன்னணி அணிகளுடன், அமெரிக்கா, கனடா, நேபாளம், ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகளும் களமிறங்குகின்றன. இந்த உலகக்கோப்பையில் இத்தாலி அணி முதன்முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. 4 பிரிவுகள் – கடும் போட்டிகள்!20 அணிகள் 4…

1 4 5 6 7 8 430