உலகக்கோப்பை செஸ் தொடரில் சாதிக்கும் இந்திய இளம் வீராங்கனை – முழு விவரம்!
தலைசிறந்த போட்டியாளர்கள் ஆடும் அந்த கேண்டிடேட்ஸ் தொடரை வெல்பவர்தான் உலக சாம்பியன் போட்டியில் ஆட முடியும். அதனால்தான் கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதிபெறுவது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. திவ்யா தேஷ்முக்குக்கு வயது 19 தான். உலகத் தரவரிசையில் 18 வது இடத்தில் இருக்கிறார். இந்த உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனையான தான் ஷாங்யிக்கு எதிராக திவ்யா மோதியிருந்தார். சீன வீராங்கனை அனுபவமிக்கவர். அவருக்கு எதிராக திவ்யா கொஞ்சம் பலவீனமான போட்டியாளராகத்தான் பார்க்கப்பட்டார். ஆனால், சிறப்பாக ஆடி இந்தப்…