PBKS v RR: அட்டகாச சேஸிங் மூலம் பிளேஆஃப் வாய்ப்பை அதிகப்படுத்திய ராஜஸ்தான்; வெளியேறிய மும்பை! | IPL 2022: Yashasvi Jaiswal wins it for Rajasthan Royals against Punjab Kings
இந்த ஐபிஎல் சீசனிலிருந்து அதிகாரபூர்வமாக மும்பை அணி நாக் அவுட்டாகி இருக்கிறது. என்ன இப்பத்தானா என்கிறீர்களா? ஆம், அப்படித்தான் சொல்கிறார்கள். இனி கால்குலேட்டரில் என்ன செய்தாலும், மும்பையால் உள்ளே வர முடியாது. பலமுறை கோப்பை வென்ற மூன்று அணிகளும் புள்ளிப் பட்டியலில் பாதாளத்தில் இருக்கின்றன. ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா, இங்க ஜெயிக்கறவன் தோப்பான், தோக்கறவன் ஜெயிப்பான்’ என சொன்ன இயக்குநர் ரமணா எவ்ளோ பெரிய தீர்க்கதரிசி. அதே சமயம், நேற்றைய முதல் போட்டியின் முடிவில் ஒரு அணி…









