Browsing: விளையாட்டு

World Chess Day 2022 : உலக செஸ் தினம் 2022: வரலாறு, முக்கியத்துவம் ,விளையாட்டை பற்றிய சில குறிப்புகள்!

ஒவ்வொரு வருடமும் ஜூலை 20 ம் தேதி உலக சதுரங்க தினத்தை உலக நாடுகள் அனைத்தும் கொண்டாடி வருகிறது. செஸ் போர்டு கேம் வீரர்களான விஸ்வநாதன் ஆனந்த், ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சன் போன்றவர்களுக்கு இந்த நாள் மிகவும் முக்கியமான நாளாகவும் அமைகிறது. இவர்களை பெருமைப்படுத்தும் நாளாகவும் இந்தநாள் உள்ளது என்றும் கூறலாம்.கீழே, உலக சதுரங்க தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தைப் பார்த்து, விளையாட்டின் சில பிரபலமான குறிப்புகளை அறிந்துகொள்வோம் வாருங்கள்.வரலாறுஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA)…

ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ‘குட் பை’ சொன்ன ஸ்டோக்ஸ்: கடைசிப் போட்டியில் செயல்பாடு எப்படி? | ben stokes good bye to odi cricket performance in his last odi match

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு குட் பை சொல்லியுள்ளார். தனது கடைசி போட்டியில் அவரது பேட்டிங் மட்டும் பவுலிங் செயல்பாடு எப்படி என்பது குறித்து பார்ப்போம். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பை கனவை நிஜமாக்கிய நாயகர்களில் ஒருவர் பென் ஸ்டோக்ஸ். அந்த நாட்டுக்காக மொத்தம் 105 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2924 ரன்கள் மற்றும் 74 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 31 வயதான ஸ்டோக்ஸ்,…

CWG 2022: ஊக்க மருந்து சோதனையில் தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி தோல்வி… காமன்வெல்த் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கம்

தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனையான தனலட்சுமி ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்ததால் காமல்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் போட்டிகள் இம்முறை பிரிட்டனின் பிர்மிங்கமில் நடைபெறுகிறது. ஜுலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதிவரை நடைபெறவுள்ள இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.இந்தியாவை பொறுத்தவரை,  36 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருந்தனர்.   100 மீ மற்றும் 4*100 மீ தொடா்…

Fred Kerley: இவர்தான் நிஜமான Popeye; கெர்லியின் விடாமுயற்சி கற்றுத் தரும் பாடங்கள்!

அமெரிக்காவின் ஒரேகன் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவருக்கான 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் முதல் இடத்தைப் பிடித்துத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் அமெரிக்க வீரர் ஃப்ரெட் கெர்லி. சாதனையாளராகத் திகழும் யாருமே அத்தனை எளிதான பாதையைக் கடந்து வந்திருக்கமாட்டார்கள். ஃப்ரெட் கெர்லியின் வாழ்க்கைப் பயணமும் இதில் விதிவிலக்கல்ல.ஃப்ரெட் கெர்லிக்கு வெறும் இரண்டு வயது இருக்கும்போது அவரின் தந்தை சிறைக்குச் செல்கிறார். அதன்பிறகு இவரையும் இவரின் 4 உடன்பிறப்புகளையும் தத்தெடுத்து வளர்க்கிறார் இவரின்…

கோலிக்கு ஆதரவாக இன்ஸ்டாவில் போஸ்ட் செய்த பீட்டர்சன்: ரியாக்ட் செய்த ஜோகோவிச் | kevin pietersen posts in support of virat kohli on instagram djokovic reacts

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் பகிர்ந்திருந்தார். அதற்கு டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ரியாக்ட் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான விராட் கோலி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு ஓய்வு அளிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இருந்தாலும் இது ஓய்வா அல்லது அவர் அணியில் இருந்து…

This is how Amul celebrated P V Sindhu’s Singapore Open victory – News18 Tamil

பி.வி சிந்து சிங்கப்பூர் ஓபனில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றதை அமுல் நிறுவனம் கொண்டாடி உள்ளது. சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடந்த ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 500 கோப்பையை ஏஸ் ஷட்லர், பிவி சிந்து வென்றதை தொடர்ந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. பேட்மிண்டன் நட்சத்திரத்தின் சமீபத்திய சாதனையைப் பற்றி பேசுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் பால்…

Paul Stirling: அயர்லாந்து கிரிக்கெட்டின் ஆபத்பாந்தவன்; 15 ஆண்டுகளாகத் தொடரும் ஆதிக்கம்! | Paul Stirling – The savior of Ireland Cricket for the past 15 years

நாளின் முடிவில் அப்போராட்டம் தோல்வியில் முடிந்தாலும் வெற்றியைத் தழுவினாலும், விலை மதிப்பற்றதாகத்தான் அவரது இன்னிங்ஸ்கள் அமைந்துள்ளன. அயர்லாந்துடன் ஆடினாலே இவரது ஒரு பெரிய இன்னிங்ஸை எதிர்பார்த்துதான் மற்ற அணிகள் தற்போதெல்லாம் ஆட வேண்டியுள்ளது. இவற்றையும் தாண்டி உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் டி20 லீக்குகளிலும், டி10 தொடரிலும் ஒன்றுவிடாமல் அத்தனையிலும் ஸ்டிர்லிங்கின் சாம்ராஜ்யம் தொடர்கிறது. அவை எல்லாவற்றிலும் பௌலர்களைச் சரணடையச் செய்வதாகவே அவரது ஸ்ட்ரைக் ரேட் இலக்கங்கள் மாறுகின்றன. பண்ட்டின் பயமறியா இயல்போடு இங்கிலாந்தின் அட்டாக்கிங் கிரிக்கெட் முறையையும்…

ரிஷப் பந்த் பயமில்லாதவர் – இங்கிலாந்து கேப்டன் புகழாரம்

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 260 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 42.1 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 113 பந்துகளில் 125 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது இந்திய…

தங்கம் வென்று வரலாறு படைத்தார் இந்திய வீரர் மைராஜ் அகமது கான் – News18 Tamil

46 வயதான மூத்த இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் வீரர் மைராஜ் அகமது கான் ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் ஆடவர் ஸ்கீட் பிரிவில் முதன் முதலாக தங்கம் வென்று வரலாறு படைத்தார்.40 ஷாட்கள் கொண்ட இறுதிப் போட்டியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவரான மைராஜ் அகமது கான் 37 முறை சரியாகச் சுட்டு தங்கம் வென்றார். கொரியா வீரர் மின்சு கிம் 36 புள்ளிகளுடன் வெள்ளியும் பிரிட்டனின் பென் லெவெலின் 26 புள்ளிகள் பெற்று வெண்கலமும் வென்றனர்.குவாலிஃபை ஆவதற்கு மைராஜ்…

அலிசன் ஃபெலிக்ஸ்: உசைன் போல்ட் சாதனையை முறியடித்தவர்; பெண்களுக்கு மகப்பேறு சலுகைகள் பெற்றுத்தந்தவர்! | The inspiring story of American track and field athlete Allyson Felix

அலிசன் ஃபெலிக்ஸ்Ashley Landis2020இல் கொரோனா, ஓடிக்கொண்டிருந்த மக்களை நிற்கச் செய்தது. ஆனால் அப்போதும் தெருக்களிலும் கடற்கரையிலும் காலியாக இருந்த மைதானங்களையும் பயன்படுத்தி தாயான பின்னர் களம் காணப் போகும் முதல் ஒலிம்பிக்ஸிற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார் அலிசன். ஜூன் 2021இல் அலிசன், அதாவது Nike நிறுவனத்திடம் இருந்து விலகிய இரண்டே ஆண்டுகளில் தன் சொந்த காலணி நிறுவனத்தை சாய்ஷ் (Saysh) என்ற பெயரில் தொடங்கினார். தன் சொந்த நிறுவனத்தின் காலணி அணிந்து 2021இல் நடந்த 2020 டோக்கியோ…

1 401 402 403 404 405 443