CWG 2022 | இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கம்: பளுதூக்குதல் வீரர் ஜெரமி சாதனை | CWG 2022: Weightlifter Jeremy Lalrinnunga wins gold in men’s 67kg final
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் வீரர் ஜெரமி லால்ரினுங்கா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 22-வது காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு போட்டியில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில், 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று நடந்த ஆடவருக்கான 67…









