Browsing: விளையாட்டு

தேசிய போட்டியில் மூன்றாவது முறையாக தங்கம் வென்ற பவானி தேவி

தேசிய வாள் வீச்சு விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை நரேந்திர மோடி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி வைத்தார். இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான சேபர் பிரிவு வாள்வீச்சில் போட்டியில் பவானி தேவி பங்கேற்றார்.இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பவானி தேவி பஞ்சாப் வீராங்கனை ஜகமீத் கவுரை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய பவானி தேவி 15- 3 என்ற கணக்கில்…

சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள், சிக்ஸர்களை விளாசிய சூர்யகுமார் யாதவ் | suryakumar yadav hit the most runs and sixes in a single year in international T20 cricket

திருவனந்தபுரம்: சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சூர்யகுமார் யாதவ். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் 107 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில்…

india won by 8wicket against south africa thiruvannathapuram |வேகத்தில் மிரட்டிய இந்தியா.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபார வெற்றி

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.இந்தியாவில் சுற்றுபயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 டி20 மற்றும் 3ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நேற்று இரவு 7 நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு…

IND vs SA | இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக முகம்மது சிராஜ் சேர்ப்பு | Siraj replaces Bumrah for last two South Africa T20Is

புதுடெல்லி: காயம் காரணமாக இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலகியுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு டி20 தொடரில் எதிரான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்கும் அவருக்கு பதிலாக முகம்மது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 28 வயதான ஜஸ்பிரீத் பும்ரா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் கடைசி இரு ஆட்டங்களில் விளையாடியிருந்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரிலும் இடம்பெற்றிருந்தார். ஆனால் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல்…

சுரேஷ் ரெய்னா பிடித்த அற்புதமான கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது

சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கிரிகெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.இந்த தொடருக்கான அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி நேற்று ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. ராய்பூரில் நடந்த இந்த போட்டியில் முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான சுரேஷ் ரெய்னா அற்புதமாக பிடித்த ஒரு கேட்ச் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. Suresh Raina is legend in fielding What a catch#sureshrainapic.twitter.com/ASQW7i2cDC—…

காயமடைந்த பும்ரா; ரீப்ளேஸ்மெண்ட் ஷமியா? உலகக்கோப்பையில் டெத் ஓவர்களைக் கவனிக்கப்போகும் பௌலர் யார்?

இந்திய அணியின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, காயம் காரணமாக உலகக்கோப்பைத் தொடரில் ஆடமாட்டார் எனும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்திய வேகப்பந்து வீச்சு படைக்குப் பெரும்பலமாக இருந்த பும்ரா உலகக்கோப்பையில் இல்லை எனும் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பும்ரா இல்லையேல் அவருடைய இடத்தை நிரப்பப்போகும் ரீப்ளேஸ்மெண்ட் வீரர் எனும் கேள்வியும் குழப்பமும் எழுந்திருக்கின்றன. இதைப்பற்றி இங்கே பார்க்கலாம்…முதுகில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக அந்தக் காயத்தை மேலும் பெரிதுபடுத்த விரும்பாததால் பும்ராவை உலகக்கோப்பையில் ஆடவைக்க வேண்டாம்…

T20 WC | இந்திய அணியில் பும்ராவுக்கு மாற்றாக களமிறங்கும் பவுலர் யார்? | which bowler to replace for injured jasprit bumrah in team india t20i world cup

அடுத்த சில நாட்களில் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சூழலில் அவருக்கு மாற்றாக இந்திய அணியில் விளையாடப் போகும் வீரர் யார் என்பதை பார்ப்போம். பும்ரா, டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார் என்ற செய்தி பரவ தொடங்கியது முதல் அவருக்கு மாற்று யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துவிட்டது.…

Jasprit Bumrah in doubt for the T20 World Cup / டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகல்

டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரலேியாவில் அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது. சூப்பர் 12 போட்டிக்கு தகுதி பெற குரூப் போட்டிகள் முதலில் தொடங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேச அணிகள் நேரடியாக சூப்பர் 12 தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது அக்டோபர் 23-ம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாட உள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்து…

INDvSA: அற்புதம் நிகழ்த்திய அர்ஷ்தீப்; திணறிப்போன தென்னாப்பிரிக்கா; முதல் போட்டியை வென்றது இந்தியா!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணி இந்தப் போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சிறப்பாக பந்துவீசி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.திருவனந்தபுரத்தின் க்ரீன்ஃபீல்ட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றிருந்தது. பெயருக்கேற்றவாறே பிட்ச்சிலும் வழக்கத்தைவிட அதிக புற்கள் நிரம்பியே காணப்பட்டது. பிட்ச் ரிப்போர்ட்டைக் கொடுத்த அஜித் அகர்கரும் எம்பாங்வாவும் நியூ பாலில் பௌலர்களுக்கு உதவக்கூடிய பிட்ச்சாக இருக்கும் என…

ஐசிசி டி 20 கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடம் பிடித்தார் சூர்யகுமார் யாதவ் | Suryakumar yadav ranked 2nd in the ICC T20 cricket rankings

துபாய்: ஐசிசி டி 20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டி 20 ஆட்டத்தில் 36 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்ததன் மூலம் சூர்யகுமார் யாதவ், ஐசிசி தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 801 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார். தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தை அடைவது இது 2-வது முறையாகும்.…

1 367 368 369 370 371 443