PBKS v LSG: சுமாரான லக்னோவும், படு சுமாரான பஞ்சாப்பும்; வேற மாதிரியாவது தோற்கலாமே கிங்ஸ்?!
தோல்வியெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. வெற்றியை போல தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கமே. இந்த உன்னதமான கருத்தை உலக உயிர்களுக்கு எடுத்துரைப்பதற்காக அறிவியலாளர்களெல்லாம் இணைந்து ஒரு ரோபோவை உருவாக்குகிறார்கள். ‘Speed 1 Terahertz, memory 1 zeta byte’ என அத்தனை அம்சங்களைக் கொண்டிருந்தாலும் தோல்வியடைவது மட்டும்தான் அதனுடைய வேலை. என்ன செய்தாலும் எப்படிச் செய்தாலும் தோற்றுப்போகும். அப்படி ஒரு ரோபோ உருவாக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அச்சு அசலாக சிவப்பு கலர் ஜெர்சி அணிந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை…