மான்செஸ்டர் சிட்டி vs லிவர்பூல் – சூடு பிடிக்கும் பிரீமியர் லீக் ரேஸில் வெல்லப்போவது யார்? | Who will win the premier league title this season?
மான்செஸ்டர் சிட்டிக்கு ஒருவர், இருவர் என்றில்லாமல் பல வீரர்கள் கோலடித்துக்கொண்டே இருக்கின்றனர். கெவின் டி புருய்னா, ரியாட் மாரஸ் ஆகியோர் 11 கோல்கள் அடித்து அந்த அணியின் டாப் ஸ்கோரர்களாகத் திகழ்கின்றனர். ரஹீம் ஸ்டெர்லிங் (10 கோல்கள்), பெர்னார்டோ சில்வா, ஃபில் ஃபோடன், கேப்ரியல் ஜீசுஸ் (தலா 8 கோல்கள்), இல்கே குண்டோகன் (6 கோல்கள்) என பல வீரர்கள் ஸ்கோர் ஷீட்டில் அடிக்கடி தங்கள் பெயரைப் பதியவைக்கின்றனர். அசிஸ்ட்களில் அதிகபட்சமாக ஜீசுஸ் 8 அசிஸ்ட்கள் செய்திருக்கிறார்.…