HBD Pollard – ஏழுகடல் தாண்டி, ஏழு மலை தாண்டி சாகசங்களை நிகழ்த்தியவன்! எழுச்சி பெறுவாரா பொல்லார்ட்?
நடப்பு ஐ.பி.எல் சீசனில் ரசிகர்களை அதிகம் கவலைக்கொள்ள வைத்திருக்கும் வீரர் பொல்லார்டே. கம்பீரமாக க்ரீஸுக்குள் நின்ற இடத்தில் நின்று பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டுக் கொண்டிருந்தவர், இந்த சீசனில் இன்னமும் சரியாக பேட்டை வீசி சமர் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.11 போட்டிகளில் 144 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ரன்களை விட பொல்லார்டின் ஸ்ட்ரைக் ரேட் அதுதான் இன்னும் வேதனையை கொடுக்கிறது. அதிரடி சூரராக அறியப்பட்ட பொல்லார்டின் இந்த சீசன் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 107 மட்டும்தான்.…