சிஎஸ்கே அணிக்கு ஆறுதல் வெற்றி: குஜராத்தை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது | GT vs CSK highlights, IPL 2025: Chennai Super Kings crush Gujarat Titans by 83 runs
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரேவும், டெவான் கான்வேயும் அதிரடியாக விளையாடினர்.…