Browsing: விளையாட்டு

Siraj : ‘தந்தையின் கனவு…இந்திய இளைஞர்களின் பிரதிநிதி!’ – இங்கிலாந்தில் சிராஜ் சாதித்ததன் பின்னணி!

“இந்தியா வெற்றி!’இந்திய அணி ஓவலில் ஒரு சரித்திர வெற்றியைப் பெற்றிருக்கிறது. நிஜமாகவே சரித்திர வெற்றிதான். ஏனெனில், இந்தத் தொடருக்கு முன்பாக சீனியர்கள் கூட்டாக ஓய்வு பெற்றனர். புதிய கேப்டனோடு இளம் வீரர்களோடு இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி எப்படியும் தோல்வியைத்தான் தழுவப் போகிறது என்பதுதான் பலருடைய கணிப்பாகவும் இருந்தது. அதையெல்லாம் மாற்றி தொடரை 2-2 என டிரா செய்திருக்கின்றனர்.ரிசல்ட்டை கடந்து இந்திய அணி கடுமையாக போராடியிருக்கிறது. எந்தத் தருணத்திலும் எதையும் எளிதாக விட்டுக் கொடுத்துவிடவில்லை. 5…

4-ம் நாள் ஆட்டத்தை நடுவர்கள் முன்கூட்டியே நிறைவு செய்தது ஏன்? – பிராட், நாசர் ஹுசைன் கேள்வி | Broad Nasser Hussain questions umpires why early stumps on day 4 oval test

லண்டன்: ஓவல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 6 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 4-ம் நாள் ஆட்டத்தை நடுவர்கள் முன்கூட்டியே நிறைவு செய்தது ஏன்? என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களான ஸ்டூவர்ட் பிராட் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோர் கேள்வி எழுப்பி உள்ளனர். 4-ம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் தடைபட்டது. அதன் பின்னர் நடுவர்கள் அந்த நாள் ஆட்டத்தை நிறைவு செய்யும் முடிவை அறிவித்தனர். அப்போது…

Virat Kohli; Mohammed Siraj; ஓவல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவை வெற்றி பெறவைத்த சிராஜை விராட் கோலி ஸ்பெஷலாக வாழ்த்தியிருக்கிறார்.

இவ்விருவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. “சிராஜும், பிரசித்தும் இருப்பதால் கேப்டன்சி எளிதாகத் தெரிகிறது” என்று கேப்டன் சுப்மன் கில் கூட இந்த வெற்றிக்குப் பின்னர் கூறியிருந்தார்.இந்த நிலையில், சிராஜின் கிரிக்கெட் கரியரில் ஒரு வழிகாட்டியாகத் திகழும் விராட் கோலி அவரைப் புகழ்ந்திருக்கிறார்.தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கோலி, “இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறது.சிராஜ் மற்றும் பிரசித்தின் மன உறுதிதான் இத்தகைய அற்புதமான வெற்றியை நமக்கு கொடுத்திருக்கிறது.குறிப்பாக, அணிக்காக அனைத்தையும் அர்ப்பணிப்பவர் சிராஜ். அவரை நினைத்து…

சிராஜ் அபாரம்: ஓவல் டெஸ்ட்டில் த்ரில் வெற்றியுடன் தொடரை சமன் செய்தது இந்தியா! | team india thumping win in oval test beats england by 6 runs siraj

லண்டன்: இங்கிலாந்து அணி உடனான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் இந்தியாவின் சிராஜ். கடைசி டெஸ்ட் போட்டியை டிரா செய்து, தொடரை 2-2 என இந்தியா சமன் செய்துள்ளது. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் ஆட்டத்தில் 35 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் சூழல் இருந்தது.…

Chahal சமீபத்தில் கலந்துகொண்ட பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்கை, மனைவியுடனான விவாகரத்து, மன அழுத்தம் என பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரரான சாஹல் சமீபத்தில் கலந்துகொண்ட பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்கை, மனைவியுடனான விவாகரத்து, மன அழுத்தம் என பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா மனைவியின் கருத்து குறித்து சஹால் பேசியிருக்கிறார். அதாவது சில வருடங்களுக்கு முன்பு ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பஸ்ராவின் “Who”s The Boss?” (ஹூ இஸ் தி பாஸ்?) என்ற நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகா சஜ்தே…

டிவில்லியர்ஸ் சதம்: பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்கா | WCL 2025 | south africa beats pakistan in wcl final abd century

பர்மிங்காம்: வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது தென் ஆப்பிரிக்க அணி. இந்த ஆட்டத்தில் 60 பந்துகளில் அதிரடியாக ஆடி 120 ரன்கள் சேர்த்து அசத்தினார் தென் ஆப்பிரிக்காவின் பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ். இங்கிலாந்தில் கடந்த மாதம் தொடங்கிய இந்த தொடர் நேற்று (ஆக.2) நிறைவடைந்தது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட அணிகள் இதில் பங்கேற்றன. சர்வதேச…

“மீண்டும் முயற்சி செய்கிறேன்” – விவாகரத்து முடிவை கைவிட்ட சாய்னா நேவால்! | Saina Nehwal changed her divorce decision

புதுடெல்லி: இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும், அவரது கணவரும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். “நன்கு யோசித்து மற்றும் பரிசீலித்து நானும் காஷ்யப்பும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரின் வளர்ச்சி மற்றும் அமைதிக்காக நாங்கள் பரஸ்பரமாக எடுத்த முடிவு இது. வருங்காலம் சிறந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று சமூக வலைதள பதிவு மூலம் சாய்னா நேவால் அறிவித்தார். இந்த…

Dhoni : 'பச்சை சிவப்பு பட்டன் போன் மட்டும் யூஸ் பண்ணுங்க; மனுசங்களோட நிறைய பேசுங்க' – தோனி

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் தோனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். மருத்துவமனையை திறந்து வைத்து விட்டு ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்யும் வகையில் சில முக்கியமான விஷயங்களை தோனி பேசியிருந்தார்.தோனிதோனி பேசியதாவது, ‘போனில் பேசுவது அத்தனை சௌகரியமாக இருக்காது. எனக்கு ஒருவருடன் பேசும்போது அவரின் உணர்வுகள் என்னவாக இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஒருவரை நேரில் பார்க்கும் போது நாம் பேசவில்லையென்றாலும் உணர்வுகளின் மூலம் நிறைய விஷயங்களை புரிந்துகொள்ள முடியும். போனில் அது முடியாது.Dhoni…

கேப்டனாக டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் கில்: ஜடேஜாவின் பல அதிரடி சாதனைகள்! | shubman Gill next to Don Bradman as captain Jadeja impressive achievements

இந்தியா – இங்கிலாந்து இடையே 5-வது டெஸ்ட் போட்டி இருதயத்துடிப்பைப் பாதிக்கும் த்ரில் பினிஷ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தொடரை இந்திய அணி சமன் செய்ய வாய்ப்பு, அதே வேளையில் முதல் டெஸ்ட் போல் இலக்கை இங்கிலாந்து விரட்டி விடவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், முதல் டெஸ்ட் பிட்ச் போல் இந்தப் பிட்ச் இல்லை. இந்தப் பிட்சும் கொஞ்சம் அதன் சாரத்தை இழந்திருந்தாலும் இன்னும் கொஞ்சமாகவேனும் சத்து உள்ளது. பிரஷர் போட்டால் இங்கிலாந்தை சுருட்டி தொடரைச் சமன்…

Dhoni: "மகள்கள்தான் பெற்றோரை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்" – தோனி எமோஷனல்!

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் தோனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். மருத்துவமனையைத் திறந்து வைத்து விட்டு சில முக்கியமான விஷயங்களை தோனி பேசியிருந்தார்.தோனிரேபிட் ஃபயர் பாணியில் தோனியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதாவது, குறிப்பிட்ட வார்த்தையைக் கேட்டவுடன் உங்கள் நினைவில் என்ன வருகிறது என்பதுதான் கேள்வி. அதற்கு தோனி சொன்ன பதில்கள்,சென்னை – என்னுடைய இரண்டாவது தாய் வீடு, இந்த மண் தத்தெடுத்துக் கொண்ட மகன் நான்.Dhoni : ‘இன்னும் 5 சீசன்…

1 2 3 357