பெங்களூரு நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: ஆர்சிபி அறிவிப்பு | Rs.10 lakhs to each of the victims families: RCB
பெங்களூரு: பெங்களூரு நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை…