Browsing: விளையாட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸி., பேட்டிங் தேர்வு | India vs Australia Live Score, 1st Test Day 1: AUS win toss, choose to bat; Suryakumar, Bharat to debut

நாக்பூர்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் (பிப்.9) இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டேவிட் வார்னரும், உஸ்மான் க்வாஜாவும் துவக்க ஆட்டக்காரர்களாக இறங்கியுள்ளனர். இந்திய அணியின் தரப்பில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் சூர்யகுமார், பரத் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக களம் காண்பது குறிப்பிடத்தக்கது. டாஸ் முடிந்ததும் பேட்டியளித்த ரோஹித் சர்மா, “டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பேட்டிங்கே தேர்வு…

விவசாயியாக மாறிய எம்.எஸ்.தோனி… ட்ராக்டர் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

ராஞ்சியில் உள்ள தனது பண்ணை நிலத்தில், ட்ராக்டரை இயக்கி தோனி விவசாயியாக மாறினார். இதுதொடர்பாக அவர் 2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்படுகிறார். சமூக வலைதளங்களில் தோனி இருந்தாலும், அதில் அடிக்கடி வீடியோ மற்றும் ஃபோட்டோக்களை பதிவு…

Border – Gavaskar Trophy: 2003, 2013, 2023 – கடந்த 20 ஆண்டுகளில் இந்தத் தொடர் சந்தித்த மாற்றங்கள்! | Border – Gavaskar Trophy and its evolution since 2003

முதல்போட்டி டிரா ஆக, இரண்டாவது போட்டியில் மூழ்க இருந்த இந்தியக்கப்பல் தோல்வியின் அடிமட்டத்தைத் தொட்டு பின் மீண்டெழுந்து முகடைத் தொட்டது. மெல்போர்னிலோ மீண்டுவந்து ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த 1-1 எனத் தொடர் சமநிலையை எட்டியது. இதுவரை எல்லாவற்றையும் சரியாகவே செய்த இந்தியாவுக்குள் நான்காவது போட்டியில்தான் சற்றே டிஃபென்சிவ் மனப்பான்மை குடியேறியது. நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 700 ரன்களைக் கடந்த பிறகுதான் டிக்ளேர் செய்தது. ஓட்டுக்குள் ஆமையாக ஒளிந்து கொள்ளாது துணிவைத் துணைக்கழைத்து சற்றே முன்னதாக அதனைச்…

சூர்யகுமார் Vs ராகுல் (அ) கில் – நாக்பூர் டெஸ்ட்டில் இந்திய அணியின் செலக்‌ஷன் தலைவலி! | nagpur test india playing eleven choice headache rahul sky gill who get chance

நாக்பூரில் நாளை இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணி வீரர்களின் பார்ம் பெரிய கவலையளிப்பதாக இருப்பதை ஒருவரும் குறிப்பிடாமல், அணிச்சேர்க்கையில் இந்தியாவின் பெஞ்ச் ஸ்ட்ரெந்த் பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அணியின் அணித்தேர்வு தலைவலி அதன் பெஞ்ச் ஸ்ட்ரெந்த்தினால் அல்ல. மாறாக பார்மில் இருக்கும் வீரரை தேர்வு செய்வது பற்றியே. ஸ்பின்னை நன்றாக ஆடும் ஸ்ரேயஸ் அய்யருக்குப் பதில் யாரைத் தேர்வு செய்வது? ரிஷப் பந்திற்கு பதிலாக இஷான் கிஷனா…

புதுபோன் தொலைந்த கடுப்பில் விராட் கோலி போட்ட பதிவு.. கூலாக கலாய்த்த சொமேட்டோ..!

இந்திய அணியின் டாப் நட்சத்திர வீரர் விராட் கோலி. கிரிக்கெட் விளையாட்டு அல்லாது வேறு ஒரு விஷயம் தொடர்பாக டிரெண்டாகி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்காமல் ஓய்வெடுத்த கோலி, மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இமயமலை பகுதிகளில் ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.இந்த சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு, அடுத்து வரப்போகும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க இந்திய அணியுடன் நாக்பூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், விராட் கோலி…

மங்கி கேட் முதல் சச்சினின் LBW வரை – பார்டர் கவாஸ்கர் டிராபியின் சர்ச்சைகள் ஒரு பார்வை!- Rewind of the controversies happened in the Border Gavaskar Trophy Tournaments

ஸ்லெட்ஜிங்கின் வாயிலாக எதிராளியின் கவனத்தைச் சிதறடிப்பது ஆஸ்திரேலியாவுக்கு கைவந்த கலை. அதிலும் பெய்ன் அதனை அடிக்கடி செய்யக்கூடியவர். வார்த்தைகளை விட்டு வாங்கிக் கட்டிக் கொள்வதும் அவருக்கு புதிதல்ல. 2018/19 தொடரில் பண்டுக்கும் அவருக்குமான உரையாடல்கள் ஸ்டம்ப் மைக்கையும் மதிமயங்கி சிரிக்க வைத்திருக்கும். தொடர்ச்சியாக பண்டை சீண்டிக் கொண்டே இருந்த பெய்ன், “எனது குழந்தைகளுக்கு பேபி சிட்டிங் செய்ய முடியுமா, நானும் எனது மனைவியும் படத்திற்குச் செல்ல வேண்டும்” என்று வம்பிழுத்தார். போட்டிக்குப் பின்னதாக அவரது குழந்தைகளோடு பண்ட்…

IND vs AUS டெஸ்ட் தொடர் | அதிக ரன்கள், சதங்கள் விளாசிய வீரர்கள் யார் யார்? – இது பேட்டிங் சாதனை துளிகள் | bgt test series india australia most runs tons players list batting record

நாக்பூர்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வியாழன் அன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்தத் தொடரில் அதிக ரன்கள், அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் யார் என்பதை விரிவாகப் பார்ப்போம். பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை இந்தத் தொடரில் எதிர்கொள்ள உள்ளது. கடந்த 1996 முதல் இரு அணிகளும் இந்தத் தொடரில் விளையாடி வருகின்றன. இதுவரை 15…

டபிள்யூ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க 409 வீராங்கனைகள் தேர்வு…

டபிள்யூ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் ஏலத்தில் பங்கேற்க 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 1,525 வீராங்கனைகள் இதற்காக விண்ணப்பத்திருந்த நிலையில் அவர்ளில் இருந்து 409 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருந்து சுமார் 120 வீராங்கனைகள் 5 அணிகளுக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றியையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தாண்டு முதல் டபிள்யூ.பி.எல். எனப்படும் விமன்ஸ் ப்ரீமியர் லீக் 20 ஓவர் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. தற்போது வரை…

Sports RoundUp: பிரதமர் மோடிக்கு வந்த மெஸ்ஸியின் ஜெர்சி முதல் பாகிஸ்தான் குறித்து பேசிய அஸ்வின் வரை! | Sports Vikatan’s Sports RoundUp: From Messi Jersey for Modi to Ashwin’s statement about Pakistan Cricket

பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்திய அணி!2023 பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை தொடர், வருகின்ற பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று, நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலிய பெண்கள் அணி, இந்திய பெண்கள் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க…

ஹர்பஜன் சிங்கின் சாதனையை நெருங்கும் அஸ்வின்

புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள ஹர்பஜன் சிங்கின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் நெருங்க உள்ளார். 36 வயதான அஸ்வின், இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அந்த அணிக்கு எதிராக அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் அனில் கும்ப்ளே(111) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக ஹர்பஜன் சிங் (…

1 306 307 308 309 310 444