`கற்பனையிலும் இவர்களை வெல்ல முடியாது!’- ஆதிக்கம் செலுத்தும் உலக சாம்பியன்ஸ் ஆஸ்திரேலியா | Women’s Cricket: Decoding Australia’s T20 World Cup Victory
டாப் 4 வீராங்கனைகளில் யாரோ இருவர் தவறாமல் பெர்ஃபார்ம் செய்து விடுவதை எப்போதுமே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அது இந்த இறுதிப்போட்டியிலும் தொடர்ந்திருந்தது. தென்னாப்பிரிக்க அணியிலும் வோல்வார்ட் அரைசதம் கடந்து பெரிய இன்னிங்ஸ் ஆடியிருந்தார். ஆனால், அவரால் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுக்க முடியவில்லை. 17வது ஓவரிலேயே அவுட் ஆகினார். பந்துவீச்சை எடுத்துக் கொண்டாலும் தென்னாப்பிரிக்கவை விட ஆஸ்திரேலியாவிற்கு கூடுதல் ஆப்ஷன்கள் இருக்கவே செய்தன. மொத்தம் 7 பௌலர்களை ஆஸ்திரேலிய அணி பயன்படுத்தியிருந்தது. கேட்ச் ட்ராப்களையும்…









