Browsing: விளையாட்டு

‘ஐபிஎல் தொடரில் அர்ஷ்தீப் சிங் கவனம் பெறுவார்’ – அனில் கும்ப்ளே நம்பிக்கை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள பவுலர் அர்ஷ்தீப் சிங் கவனம் பெறுவார் என்று அனில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதயில் தொடங்கவுள்ளது. மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் வலுவான அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.நடப்பு சீசனில் விளையாடும் அணிகள்…

Sania Mirza : 6 வயதில் தொடங்கிய பயிற்சி; தன்னம்பிக்கை பெற்றுத் தந்த கிராண்ட்ஸ்லாம்! – ஒரு பார்வை

சானியா மிர்சாபுகழ்பெற்ற டென்னிஸ் விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான சானியா மிர்சா தற்போது டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.டென்னிஸில் சானியா புரிந்த சாதனைகள் ஏராளம். பல்லாண்டு கால உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் பலன்கள் அவை.ஆறு வயதில் இருந்தே டென்னிஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர் சானியா மிர்சா. அவரது ஆரம்பகால பயிற்சியாளர் அவரது அப்பா இம்ரான் மிர்சாதான். பள்ளிப்பருவத்தில் சானியா வகுப்பில் இருந்த நேரத்தை விட மைதானத்தில் இருந்த நேரம் தான் அதிகமாம். பதின்ம வயதில் டென்னிஸ் போட்டிகளில் விளையாட துவங்கிய அவர்…

துபாய் ஓபன் | சாம்பியன் பட்டம் வென்றார் மேத்வதேவ் | Dubai Open Medvedev won the title of champion

துபாய்: துபாய் டூட்டி ப்ரீ ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரர் டேனியல் மேத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒற்றையர் இறுதிச் சுற்றில் டேனியல் மேத்வதேவ், சகநாட்டு வீரர் ஆந்த்ரே ரூபலேவுடன் மோதினார். இதில் மேத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரூபலேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியின் அரை இறுதியில் டேனியல் மேத்வதேவ், தரவரிசையில்…

கடைசி ஓவரில் குஜராத் அணியை வீழ்த்தி உ.பி. வாரியர்ஸ் த்ரில் வெற்றி…

குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.அந்த அணியின் கிரேஸ் ஹாரிஸ் – சோபி எக்லஸ்டோன் இணை 8 ஆவ விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்து அசத்தினர். மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 3 ஆவது லீக் போட்டி குஜராத் ஜெயன்ட்ஸ் – உ.பி. வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி…

WPL: 7 Ballக்கு 7 Boundary | Recreating 2008 IPL Blast | Harmanpreet Kaur| MIvsGG | Harmanpreet Kaur’s historic knock in the very first match of WPL against GG

2008 ஐ.பி.எல் இன் அறிமுக போட்டியில் மெக்கல்லம் ஆடியதை போன்ற வரலாற்று இன்னிங்ஸை வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் அறிமுக போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆடியிருக்கிறார். நன்றி

மகளிர் பிரீமியர் லீக் டி20 | குஜராத் அணிக்கு ஆட்டம் காண்பித்த மும்பை இந்தியன்ஸ் – 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி | WPL | Mumbai Indians Women won by 143 runs against Gujarat Giants Women

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நேற்று கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஹர்மான்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியை கையாண்டது. முதல் போட்டிக்கு ஏற்ப வான வேடிக்கை நிகழ்த்தினர் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகள். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில்…

குஜராத் அணியை 143 ரன் வித்தியாசத்தில் வென்றது மும்பை இந்தியன்ஸ்

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அறிமுகப் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி மும்பையின் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யஸ்திகா பாட்டியா, ஹேலி மேத்யூஸ் ஆகியோர் களத்தில் இறங்கினர். யஸ்திகா 1 ரன்னில் வெளியேற…

Shane Warne: `மரபுகளில் திளைத்து மரபுகளை மீறிய வீரன்!' – நினைவுகளில் வாழும் வார்னே!

சுழலுலக ஜாம்பவான் ஷேன் வார்னே இந்த மண்ணை விட்டு பிரிந்து இன்றுடன் ஓராண்டு கழிந்து விட்டது. பல பேட்டர்களின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வார்னே கடந்த ஆண்டு இதே நாளில் தாய்லாந்தில் இதய கோளாறு காரணமாக காலமானார். அந்த காலத்து ரேடியோ ரசிகர்கள் முதல் இந்தக் காலத்து ஐபிஎல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் வார்னேவே தெரியும்‌. அவரின் சாதனைகள் என கூகுளில் தட்டினால் அலமாரியைத் திறந்ததும் மடித்து வைக்கப்படாத துணிகள் கொட்டுவது போல் பல விஷயங்கள் கொட்டும்.…

இரானி கோப்பை | யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த தனித்துவ சாதனை! | young batsman yashasvi jaiswal creates unique record in irani cup domestic cricket

குவாலியர்: நடப்பு ஆண்டுக்கான இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனித்துவ சாதனையை படைத்துள்ளார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 213 ரன்கள் அவர் எடுத்திருந்தார். இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 144 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் இரானி கோப்பையின் ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆண்டுதோறும் இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் வட்டாரத்தில் முதல்…

ஹர்மன்ப்ரீத் அதிரடி அரைச்சதம்… மும்பை அணி 207 ரன்கள் குவிப்பு

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 207 ரன்கள் குவித்துள்ளது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 30 பந்துகளில் 65 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் இன்று ஆரம்பம் ஆனது. தொடக்க போட்டியில் ஹர்மன்ப்ரீத் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த…

1 294 295 296 297 298 444