Browsing: விளையாட்டு

Sophie Devine: `சதமல்ல அணியின் வெற்றிதான் முக்கியம்' – பெங்களூருக்காக டிவைன் ஆடிய அசாத்திய ஆட்டம்!

வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த சூழலில் எதிர்பாராத ட்விஸ்ட்டுகளும் அரங்கேறத் தொடங்கியிருக்கிருக்கின்றன. தோல்வியையே சந்தித்திடாத மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக தோற்றிருக்கிறது. தொடர்ச்சியாக தோற்றுக் கொண்டே இருந்த பெங்களூர் அணி தொடர்ச்சியாக வெல்ல தொடங்கியிருக்கிறது.நேற்று குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றிருந்தது. 36 பந்துகளில் 99 ரன்களை அடித்து ஒற்றை ஆளாக பெங்களூர் அணியை வெற்றியை நோக்கி நகர்த்திச் சென்றிருந்தார் சோஃபி டிவைன்.Sophie…

உலகின் உயரம் குறைந்த பாடிபில்டராக கின்னஸ் சாதனை படைத்த வீரருக்கு திருமணம் | World shortest bodybuilder, marries dream woman

மும்பை: உலகின் மிகவும் உயரம் குறைந்த பாடிபில்டர் என கின்னஸ் சாதனை புரிந்த வீரர் தனது நீண்ட நாள் தோழியை அண்மையில் திருமணம் செய்துகொண்டார். மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் பிரதிக் விட்டல் மொஹிதே (28). இவர் 3 அடி 4 அங்குல உயரம் கொண்டவர். இருந்தபோதிலும் பாடிபில்டிங் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு போட்டிகளில் பங்கேற்று சாதித்து வந்தார். இந்நிலையில் தனது நண்பரின் வழிகாட்டுதலின் பேரில் கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்கு விண்ணப்பித்தார். இதைத் தொடர்ந்து கின்னஸ் சாதனைப்…

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி… 183 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் உலக சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் வங்க தேச அணி கைப்பற்றி அதிர்ச்சி அளித்தது. தற்போது அயர்லாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3  போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சில்ஹெட்…

சேப்பாக்கம்: முதல்வர் ஸ்டாலின் டு கேப்டன் தோனி – கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு விழா ஹைலைட்ஸ்! | Chennai Chepauk Stadium Kalaignar Karunanidhi Stand inauguration highlights

சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் புதிய ஸ்டாண்ட்டான ‘கலைஞர் மு.கருணாநிதி’ ஸ்டாண்டின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, சிஎஸ்கே கேப்டன் தோனி, முன்னாள் வீரர் பிராவோ உள்ளிட்ட பிரபலங்கள். | Photo Album நன்றி

IND vs AUS | மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடிய கே.எல்.ராகுல்: வெங்கடேஷ் பிரசாத் பாராட்டு

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற செய்தார் இந்திய வீரர் கே.எல்.ராகுல். அவரது இந்த மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பாராட்டியுள்ளார். இந்தப் போட்டிக்கு முன்னதாக கே.எல்.ராகுல் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினார். அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஆடும் லெவனில் தனது இடத்தை அவர் இழந்திருந்தார். இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 91…

“கிரிக்கெட் பார்க்க சலிப்பா இருக்கு… ஒருநாள் கிரிக்கெட்டை நான்கா பிரிங்க” – சச்சின் டெண்டுல்கர்

ஒருநாள் போட்டிகளில் 15 முதல் 40 ஓவர்களுக்குள் ஓர் அணியின் வெற்றி, தோல்வியை கணித்து விட முடிவதாக சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டார். நன்றி

INDvsAUS : வெற்றியுடன் தொடங்கிய இந்தியா; வெறித்தன கம்பேக் கொடுத்த கே.எல்.ராகுல்! |India Vs Australia 1st ODI Match Report

கடந்த சில மாதங்களாகவே கே.எல்.ராகுலின் ஆட்டத்திறன் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்த விமர்சனங்களையெல்லாம் நேற்று உடைத்தெறிந்திருக்கிறார் கே எல் ராகுல். அதேபோல காயம் காரணமாக 8 மாத மாதத்திற்கு பிறகு தனது 300 வது சர்வதேச போட்டியில் களம் இறங்கி 45* ரன்கள் குவித்து 2 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார் ஜடேஜா. கே.எல்.ராகுல் – ஜடேஜா இணைதான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.டாஸ் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய சொன்னது. ட்ராவிஸ் ஹெட்டுடன்…

IND vs AUS 1st ODI | தூணாக நின்ற கே.எல்.ராகுல், கைகொடுத்த ஜடேஜா – ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா | india won the first ODI against Australia in 5 wickets differents

மும்பை: கே.எல்.ராகுல், ஜடேஜா துணையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று வாகை சூடியது. முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி…

கேஎல் ராகுல் – ஜடேஜா பொறுப்பான ஆட்டம்

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை அடுத்து, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்காததால் இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக வழிநடத்துகிறார்.இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டிரேவிஸ் ஹெட் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்,…

IND vs AUS: “ஸ்ரேயாஸ் விளையாடினால் நன்றாக இருந்திருக்கும்"- ஹர்திக் பாண்டியா

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது.இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.ஹர்திக் பாண்டியாஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடைபெறும் முதல் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படவுள்ளார். இதனிடையே இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.…

1 288 289 290 291 292 444