35-வது முறையாக லா லிகா கோப்பை வென்றது ரியல் மாட்ரிட்! எப்படி சாத்தியமானது இந்த வெற்றி? |real madrid won their 35th la liga title
இரண்டு முக்கிய டிஃபண்டர்களை இழந்திருந்த ரியல் மாட்ரிட், ஒரு புதிய டிஃபண்டரை மட்டுமே ஒப்பந்தம் செய்தது. பேயர்ன் மூனிச் அணியிலிருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு வந்தார் ஆஸ்திரிய கேப்டன் டேவிட் அலாபா. போதாதற்கு டேனி கர்வாகல் வேறு அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டார். விளையாடிய போட்டிகளிலும் முன்பைப் போல் ஆட முடியவில்லை. இருந்தாலும், கார்லோ ஆன்சலோடி கைவசம் இருந்த வீரர்களை வைத்தே சமாளித்தார். லூகாஸ் வாஸ்கிஸ் வழக்கம்போல் டிஃபன்ஸின் வலது பக்கம் தேவையான நேரங்களில் சிறப்பாக செயல்பட்டார். எந்த…