Browsing: விளையாட்டு

சீனாவை வீழ்த்தியது இந்தியா: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் 5-வது முறையாக சாம்பியன் | india wins its fifth title, defeats China 1-0 in Asian Champions Trophy 2024

ஹுலுன்புயர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இது இந்தியாவின் 5-ஆவது கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. இந்தத் தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் முதல் 4…

Rohit Sharma : `வேர்ல்ட் கப்ப ஜெயிச்சிட்டோம்னு அசால்ட்டா இருக்க முடியாது!’ – ரோஹித் தீர்க்கம்! | Competition is important, Rohit Sharma Press Meet at Chepauk

6-8 மாதங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டே ஆடாமல் மீண்டும் டெஸ்ட் ஆட வருவது கடினமான விஷயம்தான். ஆனால், எங்கள் அணியில் நிறைய அனுபவமான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதேமாதிரியான சூழலை ஏற்கனவே எதிர்கொண்டிருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு இது சார்ந்த அனுபவமெல்லாம் இருக்கிறது. மேலும், 12 ஆம் தேதியே நாங்கள் சென்னைக்கு வந்துவிட்டோம். இங்கேயும் பயிற்சியில் நிறைய நேரத்தை செலவிட்டிருக்கிறோம். சில வீரர்கள் துலிப் டிராபியிலும் ஆடிவிட்டு வந்திருக்கிறார்கள். அதுவும் எங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும் என நம்புகிறேன். நன்றி

முதல் டெஸ்ட்: சேப்பாக்கம் பிட்ச் எப்படி? – 5வது பவுலர் ஸ்பின்னரா, வேகப்பந்து வீச்சாளரா? | first test between team india bangladesh chepauk pitch report

நாளை மறுநாள் (செப்.19, வியாழன்) சென்னை சேப்பாக்கத்தில் வங்கதேச அணிக்கும் இந்திய அணிக்கும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. வழக்கம் போல் பிட்ச் எப்படி இருக்கும் என்ற ஆவல் எழுந்துள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற ‘SENA’ நாடுகளுக்குப் போடப்படும் குழிபிட்ச் ரகத்தை இவர்களிடம் காட்டினால் நம்முடைய இப்போதைய பேட்டர்களுமே சடுதியில் பெவிலியன் திரும்பி விடுவார்கள், காரணம் வங்கதேச அணியில் நல்ல ஸ்பின்னர்கள் உள்ளனர். சேப்பாக்கம் பிட்ச் எப்போதும் மூன்று, மூன்றரை நாட்கள்…

Tejashwi: “என் கேப்டன்சியின் கீழ் விராட் கோலி விளையாடியிருக்கிறார்” – தேஜஸ்வி யாதவின் பேட்டி வைரல் | Tejashwi Yadav revelation on his cricketing journey

பீகாரின் முன்னாள் முதல்வரும் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ்-ன் மகன் தேஜஸ்வி யாதவ் சமீபத்தில் தனியார் நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில், “நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். சிறப்பாக விளையாடினேன். அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவ்வளவு ஏன் என் கேப்டன்சியின் கீழ் வீராட் கோலியே விளையாடியிருக்கிறார். பிரபலமான பல கிரிக்கெட் வீரர்கள் என்னுடைய பேட்சை சேர்ந்தவர்கள். என் கால்முட்டுகளின் ஜவ்வு கிழிந்ததால் என்னால் தொடர்ந்து விளையாடமுடியவில்லை” எனப் பேசியிருந்தார். அவர் பேசிய…

தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிக்கு முன்னேற்றம் | ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி | Asian Champions Trophy India beats South Korea 4-1 to enter final

ஹுலுன்புயர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் முதல் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி…

`தோனியுமில்லை, கோலியுமில்லை’ – பாரா ஒலிம்பிக் தங்க நாயகனுக்கு பிடித்த கிரிக்கெட்டர் இவரா? | Paris paralympics 2024 gold medalist Navdeep singh’s favourite cricketer

இந்த நிலையில், நவ்தீப் சிங் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் தோனியுமில்லை, கோலியுமில்லை என மனம் திறந்திருக்கிறார். முன்னதாக, யூடியூப் சேனல் உரையாடலில் கலந்துகொண்ட நவ்தீப் சிங்கிடம், “நீங்கள் தோனியின் ரசிகரா இல்லை கோலியின் ரசிகரா?” என நிகழ்ச்சி தொகுப்பாளர் சுபங்கர் மிஸ்ரா கேள்விகேட்டார்.தோனி – கோலி – ரோஹித்அதற்குப் பதிலளித்த நவ்தீப் சிங், “எனக்குப் பிடித்த கிரிக்கெட்டர் ரோஹித் சர்மா. ஏனெனில் அவர் நன்றாக விளையாடுகிறார். அவர் இரட்டைச் சதம் அடித்ததிலிருந்து அவரின் ரசிகன் நான்”…

‘கோலியை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்’ – பாபர் அஸமை சாடிய யூனிஸ் கான் | Learn from Kohli Younis Khan slams Babar Azam

லாகூர்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார் பாகிஸ்தான் அணியின் பாபர் அஸம். இந்நிலையில், பேட்டிங் விஷயத்தில் பாபர் அஸம் கவனம் வைக்க வேண்டும், விராட் கோலியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். “பாபர் அஸமுக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. மிக இளம் வயதில் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார். அடுத்ததாக தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் அவரது கவனம் இருக்க வேண்டும். கேப்டன்சி…

Neeraj: “இறுதிபோட்டிக்கு முன்பே எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது, ஆனாலும்…" – நீரஜ் சோப்ரா

டைமன் லீக் போட்டி தொடர்பாக நீரஜ் சோப்ரா உருக்கமான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். 2024 ஆம் ஆண்டிற்கான டைமன் லீக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.86 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். நேற்றைய தினம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நீரஜ் சோப்ரா 0.01 மீ வித்தியாசத்தில் தங்கப் பதகத்தை இழந்திருக்கிறார். நீரஜ் சோப்ராஇந்நிலையில் நீரஜ் சோப்ரா இதுதொடர்பாக பதிவு ஒன்றைப்…

ஆஸி.க்கு எதிரான 2-வது டி20: லிவிங்ஸ்டன் அதிரடியில் இங்கிலாந்து பதிலடி | england beats ausgtralia in second t20i livingstone hits back

கார்டிப்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கார்டிப் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்தஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் ஜோஷ் இங்லிஸ் 26 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5…

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி | 45th Chess Olympiad Team India wins hattrick

புடாபெஸ்ட்: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி தனது 3-வது சுற்றில் ஹங்கேரியை எதிர்கொண்டது. முதல் ஆட்டத்தில் டி.குகேஷ் 54-வது காய் நகர்த்தலின் போது ஆடம் கோசாக்கை வீழ்த்தினார். 2-வது ஆட்டத்தில் ஆர்.பிரக்ஞானந்தா 63-வது காய் நகர்த்தலின் போது தமஸ்பானுஸை தோற்கடித்தார். தொடர்ந்து அர்ஜுன் எரிகைசி 33-வது காய் நகர்த்தலின் போது பீட்டர் புரோஹாஸ்காவை வென்றார். அதேவேளையில் விதித் குஜராத்தி – பாப் கபோர்…

1 245 246 247 248 249 450