DC v KKR: சொதப்பிய ஸ்ரேயாஸ் பிளான்; குல்தீப்பின் சுழலாலும், வார்னர், பவல் அதிரடியாலும் வென்ற டெல்லி! | IPL 2022: Delhi beats Kolkata with Kuldeep, Warner and Powell
இது வேலைக்காகாது என உமேஷை ஸ்ரேயாஸ் கொண்டுவர, வார்னரது கதையை உமேஷின் பவுன்சர் முடிக்க, பார்ட்னர்ஷிப் உடைந்தது. 26 பந்துகளில் 42 ரன்களோடு வெளுத்து வாங்கியிருந்தார் வார்னர். செட்டில் ஆன இன்னொரு பேட்ஸ்மேனையும் நரைனைக் கொண்டு வந்து கேகேஆர் அனுப்பியது. உமேஷுக்கு இன்னுமொரு ஓவரும் கொடுக்கப்பட, ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து பேக் ஆஃப் தி லெந்த்தில் வீசப்பட்ட பந்தில் பண்ட்டின் விக்கெட்டும் பறிபோனது. இந்திய டி20 அணியின் நிரந்தர வீரர்களில் சிலர், இந்த ஐபிஎல்லில் சோபிக்காமல்…