Wiaan Mulder; Brian Lara; Test Cricket; ஜிம்பாப்வேவுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 367 ரன்கள் அடித்த தென்னாப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர் லாரா சாதனையை முறியடிக்கும் வாய்ப்பிருந்தும் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார்.
இந்த நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் வியான் முல்டர் முச்சதத்தைக் கடந்தார். மதிய உணவு இடைவேளையின்போது தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 626 ரன்கள் குவிந்திருந்தது.வியான் முல்டர் 334 பந்துகளில் 49 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 367 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.லாராவின் சாதனையை முறியடிக்க வெறும் 34 ரன்கள்தான் தேவை, உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் மீண்டும் தொடங்கியதும் வியான் முல்டர் அதை நிகழ்த்திக்காட்டுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள்…