Browsing: அரசியல்

சத்துணவு திட்டத்தில் தற்போதைய நிலையே தொடர அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓரிடத்தில் சத்துணவு தயாரித்து 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் போது, உணவு தயாரிக்கப்படும் பள்ளியைத் தவிர மற்ற இடங்களில் உள்ள சத்துணவு மையங்கள் மூடப்படும். அதனால் அங்கு பணியாற்றிய சத்துணவு அமைப்பாளரும், சமையலர்களும் வேலை இழக்க நேரிடும். தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 43,190 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 1.29 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிய திட்டம்…

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதில் சசிகலா, டிடிவி தினகரன் மோதல் வெட்டவெளிச்சமானது

சென்னை: ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சசிகலா, டிடிவி தினகரன் தனித்தனியாக ஊர்வலம் நடத்தியதோடு, தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் சசிகலாவை சந்திக்கக் கூடாது என்று டிடிவி உத்தரவிட்டதால், சசிகலா கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக சென்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். சசிகலாவும், டிடிவி தினகரனும் ஒன்றாக அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் தனித்தனியாக…

68 தொகுதிகளை கொண்ட இமாசலப்பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது: கருத்துக்கணிப்பில் தகவல்

சிம்லா: 68 தொகுதிகளை கொண்ட இமாசலப்பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக 34 – 39, 28 – 33, ஆம் ஆத்மி – ஒரு தொகுதி, மற்றவைகளுக்கு 4 தொகுதியும் கிடைக்க வாய்ப்பு,  பாஜக  35 – 40, காங்கிரஸ் 20 – 25, ஆம் ஆத்மி 0 – 3, மற்றவை1 – 4 தொகுதிகளை கைப்பற்றும் என ஸீ நியூஸ், பார்க் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.…

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில், நாடாளுமன்ற தேர்தலில் வென்று காட்டுவோம்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா தரப்பினர் உறுதிமொழி ஏற்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில், நாடாளுமன்ற தேர்தலில் வென்று காட்டுவோம் என ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா தரப்பினர் உறுதிமொழி ஏற்றனர். அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரின் 6ம் ஆண்டுநினைவு நாளான இன்று (திங்கள்) காலை 10 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கே.பி.முனுசாமி, நத்தம்…

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும் ஜெயலலிதா  நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். Source link

விவசாயிகள் நஷ்டமடைவதை தடுக்க காய்கறிகளுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு அரசே கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மாவட்டங்களில் வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தைகளில் உரிய விலை கிடைக்காததால் சாலைகளில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளன. இது வேதனையளிக்கிறது. இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு அனைத்து காய்கறிகளுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிப்பதன் மூலம் தான் காய்கறிகளை பயிரிடும் உழவர்களுக்கு லாபம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அதற்காக வேளாண் விளைபொருள்…

சொல்லிட்டாங்க…

கட்சியில் பொறுப்பில் உள்ள நபர்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். முடியாதவர்கள் அடுத்தவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். :- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேதமிழகத்தில் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை உடனே சட்டமாக நிறைவேற்ற வேண்டும். : – பாமக தலைவர் அன்புமணிகவர்னருக்கு மசோதா வந்த உடன் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆலோசனை பெறுவதற்கான நேரத்தை காலதாமதமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. :- புதுச்சேரி துணை…

முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் குஜராத்தில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: நாளை மாலை கருத்துக்கணிப்பு ரிசல்ட்; 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை

அகமதாபாத்: குஜராத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் நாளை இரண்டாம் கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் நாளை மாலை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவும், வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவும் வெளியாகிறது. குஜராத்தில் 182 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபைக்கு முதல் கட்டமாக கடந்த 1ம் தேதி 89 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 63.31 சதவீத வாக்குகள் பதிவானது. சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாக இருந்தது. கடந்த…

நடிகை காயத்ரி ரகுராமிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிக்கு புதிய தலைவர் நியமனம்: அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

சென்னை: நடிகை காயத்ரி ரகுராமிடமிருந்து பறிக்கப்பட்ட பதவிக்கு இசை அமைப்பாளர் தீனாவை நியமித்து பாஜ தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 22ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைத்தளம் பதிவு, ஆடியோ பேச்சு விவகாரம், அண்ணாமலைக்கு எதிரான பேச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அப்போது பரபரப்பு தகவல் வெளியானது. கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதம் காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் நிர்வாகிகள்…

கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி ஓபிஎஸ், இபிஎஸ் சுயநலவாதிகள் அதிமுகவைவிட்டு விலகுகிறேன்

கோவை: ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரு சுயநலவாதிகளுடன் இருக்க விரும்பவில்லை. அதிமுகவைவிட்டு விலகுகிறேன் என கோவையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் பரபரப்பாக பேட்டி அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வம் நல்ல நேர்மையான மனிதர் என நினைத்து நான் அதிமுகவுக்கு கடுமையாக உழைத்தேன். அவருக்காக விசுவாசமாக பணியாற்றி வந்தேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து எனது மனசாட்சிபடி பேட்டி அளித்தேன். ஜெயலலிதாவின் உயிரைவிட முதல்வர் பதவிதான் முக்கியம் என எடப்பாடி…

1 55 56 57 58 59 161