Browsing: அரசியல்

44வது சதுரங்க ஒலிம்பியாட் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்திய முதல்வருக்கு பாராட்டு: அன்புமணி அறிக்கை

சென்னை: 44வது சதுரங்க ஒலிம்பியாட் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய முதல்வர் உள்ளிட்டோருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: சதுரங்கப் போட்டிகளின் தொடக்கவிழாவைப் போல் இல்லாமல் உலகத் தமிழ் மாநாட்டுக்கு இணையாக தமிழர் நாகரிகத்தின் பெருமையையும், பண்பாட்டையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனின் கருத்தாக்கமும், காட்சிகள் அமைப்பும் பாராட்டுக்குரியவை ஆகும். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரும்…

எடப்பாடி, ஓபிஎஸ்சை புறக்கணித்த மோடி; தமிழகத்தில் பாஜ தலைமையில்தான் கூட்டணி: மோடி உத்தரவு; அதிமுக அதிர்ச்சி

சென்னை: அதிமுகவில் தலைமையை பிடிக்கும் போட்டியில்  கட்சி இரண்டாக உடைந்தது. நிர்வாகிகள் பெரும்பான்மையோர் எடப்பாடி பக்கமும், தொண்டர்கள் பெரும்பான்மையானோர் ஓபிஎஸ் பக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக, சின்னம், ஆகியவற்றுக்கு இருவரும் போட்டி போடுகின்றனர். இரு தரப்பினரும் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் அணுகியுள்ளனர். இதனால் மோடியின் ஆதரவு இருந்தால் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று இரு தரப்பினரும் போராடி வருகின்றனர்.இந்த மோதலுக்கிடையே திடீரென, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வேட்பு மனு தாக்கலுக்காக ஓ.பன்னீர்செல்வம் டெல்லி…

வரவேற்க ஒருவர், வழியனுப்ப ஒருவருக்கு மட்டுமே அனுமதி எடப்பாடி, ஓபிஎஸ்சை தனியாக சந்திக்க மோடி மறுப்பு: பாஜ நிர்வாகிகள் 17 பேருடன் தனியாக ஆலோசனை

சென்னை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனியாக சந்திக்க, பிரதமர் மோடி மறுத்து விட்டார். அதேநேரத்தில், வரவேற்க ஒரு அணிக்கும், வழியனுப்ப ஒரு அணிக்கும் அனுமதித்த அவர், தமிழக பாஜ நிர்வாகிகள் 17 பேருடன் தனியாக ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் தற்போது புயல் வீசி வருகிறது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகின்றனர். இருவரும் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாடி வருகின்றனர். இந்தநிலையில், இருவரும் தங்களுக்குத்தான் பாஜ ஆதரவு இருக்கிறது என்று…

பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல. அறிவாற்றலை மேம்படுத்திடவும் தான் :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

சென்னை : பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல. அறிவாற்றலை மேம்படுத்திடவும் தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை.யின் கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் 42வது பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசாக வழங்கினார்.தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,’பிரதமர் மோடி…

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் செயல்படும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான மன்றம் சார்பில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம், இந்தி, தமிழ், வரலாறு, பொருளாதாரம், தத்துவம், பெங்காலி நாட்டுப்புற நடனம், உருது, புத்தமதம் மற்றும் இந்திய கல்வி என சுமார் 11 வகை பாடப் பிரிவுகளுக்கான இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.இதிலும் அதிகபட்சமாக இந்தி மொழியும், அடுத்த நிலையில் சமஸ்கிருதமும் உள்ளன. தற்போது ஐசிசிஆர் சார்பில் வெளியிடப்பட்ட…

ஒன்றிய அரசு மறுத்த நிலையில் மருத்துவ கல்லூரிகளை அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் சொந்த நிதியில் மருத்துவ கல்லூரிகளை அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய அண்மையில் பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவில்லை.சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிற்கு 17…

சொல்லிட்டாங்க…

உலக அரங்கில் இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டக்கூடிய பிரமாண்டமான செஸ் போட்டி நம் தமிழ்மண்ணில் நடக்கிறது. : – புதுச்சேரி ஆளுநர் தமிழிசைதமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் கொள்கை. :- பாமக நிறுவனர் ராமதாஸ்தமிழ்மொழி, திருக்குறள் மீது பற்றுடையவராக தன்னை முன்னிறுத்தும் பிரதமர் மோடி, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோஇந்தியாவில் விரைவில் ‘ஸ்கை பஸ்கள்’ எனப்படும்…

அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பிரதமர் தலையிட நாங்கள் விரும்பவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பிரதமர் தலையிட மாட்டார்; அதை நாங்கள்  விரும்பவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:செஸ் போட்டி உலகளவில் தமிழ்நாட்டில் நடப்பது நமக்கு பெருமைதான்.  ஆனால் இந்த விளையாட்டு போட்டியில் புகழ் பெற்றியிருக்கின்ற சாம்பியன்கள் இருக்கின்றார்கள். பொதுவாக  பிரதமர் ஒரு நிகழ்ச்சியிலே பங்குபெறும்போது, படங்கள் வைப்பதற்கு ஒரு ப்ரோட்டோகால் இருக்கிறது. அதன்படி படங்களை பிரசுரிப்பது என்பது வழக்கம். ஆனால் அவ்வாறு பிரசுரிக்கவில்லை என்றால் அது…

சொல்லிட்டாங்க…

* எம்ஜிஆர் மாளிகையில் அத்துமீறி நுழைந்து, கதவுகளை உடைத்து, பொருட்களை சேதப்படுத்தியுள்ள துரோகிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிற்போம். துரோகிகளை ஓட ஓட விரட்டி அடிப்போம். – அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி.* எத்தகைய மோசமான சூழ்நிலைகள் வந்தாலும் அந்நேரத்தில் பொறுமையாக இருந்து அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை மட்டும் பெண்கள் சிந்திக்க வேண்டும். – சசிகலா* செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை குவிக்க வாழ்த்துகிறேன். – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை. *…

19 எம்பிக்கள் சஸ்பெண்ட் முத்தரசன் கண்டனம்

சென்னை: நாடாளுமன்றத்தில் 19 எம்பிக்களை நீக்கம் செய்திருப்பது ஜனநாயக உரிமைகளை அழித்தொழிக்கும் செயல் என்று முத்தரசன் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலங்களவையில், மக்கள் வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலையுயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது, அக்னிபாத் திட்டம் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க…

1 116 117 118 119 120 161