Browsing: அரசியல்

இலங்கைக்குள் நுழையாமல் சீன உளவு கப்பலை தடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: லடாக் பகுதியில், ஊடுருவி தொல்லை கொடுத்து வரும் சீனா, தெற்கில் இலங்கையிலிருந்து தொல்லை கொடுக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் 11ம் தேதி வரவிருக்கும் சீன உளவுக் கப்பலை அனுமதிக்கக் கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சீனக் கப்பலை இலங்கை அனுமதித்தால், இந்தியா கடினமான நடவடிக்கையையும் எடுக்க தயங்கக் கூடாது. Source link

சொல்லிட்டாங்க…

சிவசேனா கட்சியை உடைக்க முயற்சி நடக்கிறது. என்னைக் கைது செய்தாலும் சிவசேனா கட்சி உடையாது. :- சஞ்சய் ராவத் இந்தியாவுக்கு எதிரான சீனச் சதிகளுக்கு இலங்கை ஆட்சியாளர்கள் அப்பட்டமாக துணைபோகின்றனர். :- பாமக நிறுவனர் ராமதாஸ்மோடி தலைமையிலான இந்த 8 ஆண்டு ஆட்சி அதானி, அம்பானி ஆகியோரது நலன்களை பாதுகாக்கின்ற ஆட்சி. உழைக்கின்ற மக்களுக்கு எதிரான ஆட்சியாக உள்ளது. :- விசிக தலைவர் திருமாவளவன்.திருடர்கள், பொய்சொல்வோரை திருத்த முடியும். துரோகிகள் திருந்த மாட்டார்கள். :- அமமுக பொதுச்…

பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: என்எல்சி நிறுவனம், வேலைவாய்ப்புகளில் 100% பணி இடங்களில் வட இந்திய இளைஞர்களை தேர்வு செய்து என்எல்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை. இது தமிழ்நாட்டிற்கு செய்யப்பட்டுள்ள பச்சை துரோகம் ஆகாதா. உடற் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிதாக அறிவிப்பு வெளியிட்டு…

தமிழகத்தில் முதலீடுகள் குறித்து பொய் புகார் பரப்புரை வேண்டாம்: இபிஎஸ்க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் முதலீடுகள் குறித்து பொய் புகார் பரப்புரை வேண்டாம் என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். Source link

அதிக முதலீடு செய்பவர்கள் அதிமுக தலைமைக்கு வரலாம்: மதுரையில் டிடிவி.தினகரன் பேச்சு

மதுரை: யார் அதிகமாக முதலீடு செய்கிறார்களோ, அவர்கள் அதிமுக தலைமைக்கு வரலாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசினார். மதுரை சிந்தாமணியில் நேற்று ஒருங்கிணைந்த மாவட்ட அமமுக செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது: மக்கள் பணத்தை தண்ணீராக செலவழித்து கொண்டிருந்தவர்களால், ஜெயலலிதா, எம்ஜிஆரிடம் இருந்த தலைமை பதவி பணம் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது. தலைமை பதவியை ஏலம் போட்டு, ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி, தற்போது நீதிமன்றத்தில் குடுமிப்பிடி சண்டையில் போய்…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சித்தராமையா திடீர் சந்திப்பு: சிறப்பாக ஆட்சி நடத்துவதாக பாராட்டு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கர்நாட முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று நேரில் சந்தித்து பேசினார். கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி அவரை வரவேற்றார். இச்சந்திப்பின் போது அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி…

எடப்பாடி பழனிசாமியை நீக்கி உள்ளோம் தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்: சட்டரீதியிலான போராட்டங்களால் சிக்கல் நீடிப்பு

சென்னை: எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கி உள்ளோம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் சட்டரீதியிலான போராட்டங்கள் நீடிப்பதால் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நேற்று மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‘‘எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகளாக சிலரது பெயரை அறிவித்துள்ளார். இது சட்ட விரோதமான அறிவிப்பு ஆகும். புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும்போது என்னிடம் உரிய அனுமதி…

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கி உள்ளோம் : தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்ததை தொடர்ந்து எடப்பாடி அணியினர் கடந்த 11ம் தேதி கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டி பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். அது மட்டுமின்றி கட்சியின் விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் மாறி மாறி முக்கிய நிர்வாகிகளை நீக்கி…

தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம்.. ஓபிஎஸ்-க்கும் அழைப்பு கடிதம் :அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் என ஓபிஎஸ் பதில்!!

சென்னை, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த தலைமை செயலகத்தில் நாளை மறுதினம் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு ஓபிஎஸ் அணிக்கும் தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்கும் திட்டம் ஆகஸ்டு 1ம் தேதி (நாளை மறுதினம்) தொடங்கப்படுகிறது. இந்த பணியை அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரட்டை…

அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடைய ஒன்றிய அரசு ரூ6,664 கோடி ஒதுக்கியுள்ளது: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை

சென்னை: அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடைய ஒன்றிய அரசு கடந்த 4 ஆண்டுகளில் ரூ6,664 கோடியை ஒதுக்கியுள்ளது என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது தமிழகத்தின் கல்வி மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்தவும், அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடையவும் சமகிர சிக்‌ஷா நிதி மூலமாக…

1 115 116 117 118 119 161