உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தீர்மானம்: ‘யாருக்கு தர்ம சங்கடம்?’ ஆதரவும் மறுப்பும் சொல்வது என்ன?
ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ்3 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Udhayanidhi Stalin facebook page’உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்’ எனத் தமிழநாடு அமைச்சர்களே கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. ‘ உதயநிதியை குளிர்விப்பதற்காக இதுபோன்று தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர். அப்படியொரு சிந்தனை உதயநிதிக்கு இருந்தாலும் இந்த விவகாரத்தில் பா.ஜ.க அரசியல் செய்யவே வாய்ப்பு அதிகம்’ என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள். அமைச்சர்களின் தீர்மானம்திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தி.மு.க தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 30…









