Browsing: செய்திகள்
75வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு விருந்தினர்கள் பலருக்கும் ஆளுநர் தேநீர் விருந்து வழங்குகிறார். விருந்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், அரசு செயலர்கள் பங்கேற்றுள்ளனர். Source link
“தாக்கரேயிடம் எஞ்சியிருக்கும் சிலரால் சேனாவை உருவாக்க முடியாது” – பட்னாவிஸ் மனைவி அம்ருதா | Few left of Uddhav Thackeray can’t build Sena: Fadnavis’ wife Amrutha
மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பிரபல தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக இருக்கிறார். கடந்த முறை மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் இருந்த போது மகாராஷ்டிரா அரசு ஊழியர்களின் சம்பள கணக்கை தான் வேலை செய்த வங்கியில் திறக்கவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சர்ச்சையும் ஏற்பட்டது. தற்போது மீண்டும் பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்று இருக்கிறார். இது குறித்து அம்ருதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது, “எனது கணவர் எப்போதும்…
அறிவியல் அதிசயம்: 320 கோடி ஆண்டுகளாக அழிவின்றி வாழும் ஓர் ‘ஆன்மா’வின் ஆச்சர்ய கதை
பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்40 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Science Photo Library(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினெட்டாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. -…
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார் – News18 Tamil
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி உட்பட அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில், காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றுகிறார்.நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றவுள்ளார். சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ள இவ்விழாவை முன்னிட்டு, செங்கோட்டையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை…
அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல்: சீமான் பேட்டி
சென்னை: அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நேர்மையாக இயங்க வேண்டுமென நினைப்பவர் பிடிஆர்,இது ஒரு கொடுமையான செயல்,வன்மையாக கண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். Source link
“அண்ணாமலை வரலாற்றை திணிக்க பார்க்கிறார்” – விழுப்புரத்தில் கே.எஸ்.அழகிரி ஆவேசம் | Congress committee head KS Alagiri press meet at Villupuram
5,000 ஆண்டுக்காலமாக இருந்த இந்த சாதனத்திற்கு எதிராக… நூறாண்டு காலமாக காங்கிரஸ், பொதுவுடைமை கட்சிகள், திராவிட இயக்கங்களும் போராடி வருகின்றன. அண்ணாமலை வரலாற்றை திணிக்க பார்க்கிறார். ஏதோ… இந்த சமூக நீதிக்கு நாங்க எதிராக இருக்கிறதாகவும், அவர் ஆதரவாக இருக்கிறதாக தோற்றத்தை ஏற்பாடு செய்கிறார், அது தவறானது. இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு எல்லாம் காரணம், உங்களுடைய சனாதன தர்மம்தான். அதை நீங்கள் தர்மம் என்று சொல்கிறீர்கள், நாங்க அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சமூக ஒற்றுமை, அனைவரும் சமம் என்பதுதான் தர்மம்.…
பல்கலை தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக தலைவர் உள்பட மூவர் கைது
48 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவகாரத்தில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், அவருக்காக தேர்வு எழுதியவரான திவாகர் மாதவன், உடந்தையாக இருந்ததாக ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூரில் உள்ள திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் நடத்தும் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் ஆண்டு தேர்வு சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது.அந்த தேர்வில் 6 பாடங்கள் உள்ள நிலையில் சனிக்கிழமை…
அண்ணாமலை அறிவிப்பு – News18 Tamil
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன் அவரை சந்தித்து மன்னிப்பு கோரியிருந்தார். இந்நிலையில், சரவணனைகட்சியில் இருந்து நீக்கி மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையின் போது உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் அக்கட்சியினர் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த நிதியமைச்சர்…
கொரோனாவுக்கு உலக அளவில் 6,453,201 பேர் பலி
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.53 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,453,201 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 594,549,457 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 566,850,147 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,702 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link









