Browsing: செய்திகள்

அதிகாலை பனிமூட்டம்; ரயில் பராமரிப்பு வாகனம் மோதி 4 ஊழியர்கள் உயிரிழப்பு – மகாராஷ்டிராவில் சோகம்! | 4 railway employees were killed in a collision with a railway maintenance wagon in Maharashtra early morning.

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாசிக் அருகில் இருக்கும் லாசல்காவ், உகாவ் பகுதிகளுக்கு இடையே இன்று காலையில் ரயில்வே ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அருகில் இருப்பவர்கள்கூட கண்ணுக்குத் தெரியாமல் இருந்தது. அந்நேரம் ரயில்வே மின்சார பராமரிப்பு வாகனம் அங்கு வந்தது. அந்த வாகனம் வருவதை கவனிக்காத ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், அவர்கள்மீது அந்த ரயில்வே வாகனம் மோதியது. இதில் 4 ஊழியர்கள் பலத்த…

திருவண்ணாமலையில் நடந்த 4 ஏடிஎம் கொள்ளையில் யாருக்கு தொடர்பு?

2 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம்களில் ஒரே நேரத்தில் நடந்த துணிகர சம்பவத்தில் ரூ.70 லட்சம் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. “குறிப்பிட்ட சில ஏடிஎம் இயந்திரங்கள் குறி வைத்து இந்த கொள்ளை நடந்துள்ளது. இதை வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாகச் சேர்த்து நடத்தியுள்ளனர்,” என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகாலை நான்கு வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் ஒரே நேரத்தில் கொள்ளை நடந்துள்ளது. இது தொடர்பாகத் திருவண்ணாமலை…

மதுராந்தகம் அருகே லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் பலி

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர் குமார், அவரது மனைவி உமா பலியாகி உள்ளனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Source link

நடனத்தில் அதீத நாட்டம்; யூடியூபைப் பார்த்து தென்கொரியா செல்ல முயன்ற ஊட்டி சிறுமிகள்! |police rescued two Ooty children trying to reach South Korea to learn dance

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 9-ம் வகுப்பு பயின்று வந்த இரண்டு மாணவிகள் கடந்த வாரம் திடீரென மாயமானதாக சிறுமிகளின் பெற்றோர் ஊட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், மாயமான சிறுமிகள் இருவரும் கோவையில் இருப்பதைக் கண்டறிந்த காவல்துறையினர், இருவரையும் மீட்டு விசாரித்திருக்கின்றனர். மாயமான காரணத்தை சிறுமிகள் தெரிவித்ததைக் கேட்ட, காவல்துறையினர் திகைப்பில் ஆழ்ந்திருக்கின்றனர்.போலீஸ் விசாரணைஇது குறித்து நம்மிடம் பகிர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர்,…

விலங்குகளால் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடியுமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைவிலங்குகளால் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடியுமா?41 நிமிடங்களுக்கு முன்னர்துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக வெளியான வீடியோக்களில் விலங்குகள் விநோதமாக நடந்து கொள்வதை நாம் பார்க்கலாம். அந்த வரிசையில் இந்த வீடியோவில் நாய் ஒன்று ஊளையிடுகிறது.அது நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை என சமூக ஊடகங்களில் மக்கள் பேசுகின்றனர். விலங்குகளால் நிலநடுக்கத்தை முன்னதாகவே கணிக்க முடியுமா? Source link

மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. Source link

தாம்பத்தியத்தை பாதிக்கும் வயது வித்தியாசம்… தீர்வு என்ன? | காமத்துக்கு மரியாதை – S3 E28

எனக்கு 40 வயது. அவருக்கு 58. திருமணமாகி 20 வருடங்கள் ஆகின்றன. திருமணமானவுடனே குழந்தைகளை, வீட்டுப் பெரியவர்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு என பிஸியாகவே இருந்துவிட்டேன். கணவரும் வேலை வேலை என்று இருந்துவிட்டார். இப்போது பிள்ளைகளெல்லாம் வளர்ந்துவிட்டதால், பொறுப்புகள் குறைந்துவிட்டன. தாம்பத்திய உறவை அனுபவித்து வாழ ஆசையாக இருக்கிறது. ஆனால், கணவரால் இயலவில்லை. என்ன செய்வது ? – வாசகி ஒருவரின் பிரச்னை இது. தீர்வு சொல்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.Dr. Narayana Reddy`புராஸ்டேட் கேன்சர்… விறைப்புத்தன்மை குறைய காரணமாகுமா?’ – காமத்துக்கு…

அதானி ஸ்பான்சர் செய்த விருதை வாங்க மறுத்த கவிஞர் சுகிர்தராணி: “வெளிச்சத்துக்காக செய்யவில்லை”

திவ்யா ஜெயராஜ்பிபிசி தமிழ்19 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Sukirtha Rani/FBபடக்குறிப்பு, சுகிர்தராணி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் தனக்கு அறிவித்திருந்த ‘தேவி’ விருதை வேண்டாம் என கூறியிருக்கிறார் தமிழ்க் கவிஞர் சுகிர்தராணி. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அதானி குழுமம் முதன்மையான ஸ்பான்சராக இருந்ததுதான் தான் விருதினை மறுப்பதற்குக் காரணம் என்கிறார் அவர். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் பெண் ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘தேவி’ என்ற விருதை…

வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழப்பு!

வாணியம்பாடி: வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளார். பட்டாசு கடை தீ விபத்தில் காயமடைந்த மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டாசு கடையில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். Source link

ராமநாதபுரம்: வீடு புகுந்து வாலிபர் வெட்டிக் கொலை; முன்விரோதம் காரணமா? – போலீஸ் விசாரணை

ராமநாதபுரம், காட்டு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மகன் பக்கா என்ற பிரபுதேவா (28). இவர்மீது ராமநாதபுரத்திலுள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் தலையில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிரபுதேவா இறந்துகிடந்திருக்கிறார்.கொலைசெய்யப்பட்ட பிரபுதேவாபிரபுதேவாவின் தாய் நேற்று முன்தினம் இரவு அவர் உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு, நேற்று காலை வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது வீடு திறந்து கிடந்திருக்கிறது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகன் வெட்டிக்…

1 389 390 391 392 393 529