அதிகாலை பனிமூட்டம்; ரயில் பராமரிப்பு வாகனம் மோதி 4 ஊழியர்கள் உயிரிழப்பு – மகாராஷ்டிராவில் சோகம்! | 4 railway employees were killed in a collision with a railway maintenance wagon in Maharashtra early morning.
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாசிக் அருகில் இருக்கும் லாசல்காவ், உகாவ் பகுதிகளுக்கு இடையே இன்று காலையில் ரயில்வே ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அருகில் இருப்பவர்கள்கூட கண்ணுக்குத் தெரியாமல் இருந்தது. அந்நேரம் ரயில்வே மின்சார பராமரிப்பு வாகனம் அங்கு வந்தது. அந்த வாகனம் வருவதை கவனிக்காத ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், அவர்கள்மீது அந்த ரயில்வே வாகனம் மோதியது. இதில் 4 ஊழியர்கள் பலத்த…








