அம்ரித்பால் சிங்: பஞ்சாபுக்கு அச்சத்தை விளைவித்த இந்த கனடா மத போதகர் யார்?
பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்தன்னை தானே மத போதகர் என அழைத்துக் கொள்ளும் அம்ரித்பால் சிங்கின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கடந்த வாரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்தை மிகவும் ஆக்ரோஷமாக முற்றுகையிட்டனர். அம்ரித்பால் சிங்கின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருந்தது.திரண்டிருந்தவர்கள் அனைவரும் மிகவும் கோபமாக காணப்பட்டனர். அவர்களது கைகளில் துப்பாக்கிகளும் வாள்களும் இருந்தன. அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி விடுவிக்கப்படுவார் என்று உத்தரவாதம்…







