”பாஜக தலைவரான பிறகும் ஜெயலலிதா தொண்டர் மனநிலையில் இருக்கிறார் நயினார் நாகேந்திரன்”-டி.டி.வி.தினகரன்
திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அ.ம.மு.க செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களான திமுக மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை விட்டு விட்டு பிள்ளை பிடிப்பவர்கள் போல் மற்ற கட்சிகளிலிருந்து ஆட்களை பிடிப்பதில் மும்முமரமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஊழல் முறைகேடுகள். யார் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைமை நிலவுகிறது.…