தமிழ்நாடு காவல்துறையில் அதிகரிக்கும் காவலர் மரணங்கள் – என்ன காரணம்?
ஆ. விஜயானந்த்பிபிசி தமிழ்57 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesமே தினம் உள்பட ஆண்டு முழுவதும் உழைக்கக்கூடிய துறையாக இருந்தாலும் காவல்துறையில் சர்ச்சைக்குப் பஞ்சமில்லை. ‘இதர அரசுத் துறைகளைப் போல எந்த விடுப்பையும் அனுபவிக்க முடியாது. இதனால் ஏற்படும் மனஉளைச்சல்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன’ என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில். தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களுக்கு ஒருநாள் விடுப்பு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைந்த ஆட்சியில்…