சென்னை: இன்ஸ்ட்ராகிராம் மூலம் நட்பு; போக்சோவில் கைதான இளைஞர்! – என்ன நடந்தது? | police arrested a youth who sexually abused a girl in chennai teynampet
சென்னை தி.நகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 13 -வயது சிறுமியை கடந்த 6-ம் தேதி முதல் காணவில்லை என அவரின் பெற்றோர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை பம்மல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அதனால் இருவரையும் போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், இளைஞரின் வீட்டில் சிறுமி தங்கியிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து…