இலங்கை நெருக்கடி: 65,000 மெட்ரிக் டன் யூரியா வழங்க இந்தியா இணக்கம்
2 மணி நேரங்களுக்கு முன்னர்(இன்றைய (மே 16)இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)65,000 மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு உடனடியாக அனுப்ப இந்தியா எடுத்துள்ள தீர்மானத்துக்கு டெல்லியிலுள்ள இலங்கை தூதர் மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அச்செய்தியில், “இலங்கையிலுள்ள 2.2 கோடி மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து வருகின்ற நிலையில், ஆண்டுதோறும் 40 கோடி அமெரிக்க டாலருக்கு இலங்கை உரங்களை…