Browsing: செய்திகள்

CSK vs RR: வெற்றிக்காக ஏங்கும் ராஜஸ்தான், தடுமாறிய சிஎஸ்கே – எழுச்சி யாருக்கு?

பட மூலாதாரம், Getty Images30 மார்ச் 2025, 12:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்குவாஹாட்டியில் நடைபெறும் ஐபிஎல் 11வது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. டாஸில் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இரண்டு அணிகளுமே கடந்த போட்டிகளில் பின்னடைவை சந்தித்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையிலும் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கைத் தொடங்கினாலும், தன்னுடைய இரண்டாவது போட்டியில்…

`உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன; திமுக நிர்வாகிகள் கவனமாக பேசவேண்டும்’- ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

ராமேஸ்வரம் நகர் திமுக சார்பில் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர் மன்ற தலைவர் நாசர் கான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறைப்புரையாற்றிய திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “‘யார் கட்சி ஆரம்பித்தாலும் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் இளைஞர்கள் சிலர் புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்களின் பின்னால் செல்கின்றனர். அவர்களின் ஆசை எல்லாம் நிராசையாக போய்விடும். தமிழ்நாட்டில் திமுக-விற்கு மாற்றாக எந்த கட்சியாலும் வர முடியாது. தமிழக முதல்வர், இப்பகுதி மீனவர்களின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி தருபவர்.…

தூத்துக்குடி: காதலிக்க மறுத்த சிறுமிக்கு என்ன நடந்தது? இன்றைய டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் 46 நிமிடங்களுக்கு முன்னர்இன்றைய தினம் (30/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.காதலிக்க மறுத்ததால் உயிரோடு தீவைத்து கொளுத்தப்பட்ட 17 வயது சிறுமி உயிரிழந்ததாகவும் இதுதொடர்பாக 2 இளைஞர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார், இவரது மனைவி காளியம்மாள். இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய…

Vikatan Weekly Quiz: எம்.பி-க்கள் சம்பளம் உயர்வு டு ATM கட்டணம் உயர்வு – இந்த வார க்விஸ்க்கு ரெடியா? | vikatan weekly quiz about important happenings between 2025 march 23 to march 29

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு, ஏடிஎம் கட்டணம் உயர்வு, இளையராஜாவுக்கு பாராட்டு விழா அறிவிப்பு, சர்வதேச கால்பந்து போட்டியில் கின்னஸ் சாதனை என இந்த வாரத்தின் சம்பவங்கள் பல பல… அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.விகடன் App வழியே இந்த Quiz-ல் பங்கேற்கப் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.https://forms.gle/bxar5nwL6K6ZRadr5?appredirect=website Source link

கத்தார் சிறையில் இந்திய மென்பொருள் நிறுவன அதிகாரி – காரணம் என்ன?

பட மூலாதாரம், JP GUPTAகட்டுரை தகவல்ஒவ்வொரு வாரமும், தனது மகன் தொலைபேசியில் அழுவதை கேட்கும் போது ஜேபி குப்தாவின் மனம் உடைந்துபோகிறது.இந்த வாராந்திர தொலைபேசி அழைப்பு நிகழ்வு ஜனவரியில், கத்தாரில் இருக்கும் இந்திய மூத்த தொழில்நுட்ப அதிகாரியான அமித் குப்தா இதுவரை வெளியிடப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பின்னர் தொடங்கியது.அதன் பின் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்னவென்பது தங்களுக்கு தெரியாது என இந்தியாவில் இருக்கும் அவரது குடும்பத்தினர்…

பிரபல ரௌடி அசோக்கைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்.. செங்கல்பட்டு வனப்பகுதியில் நடந்ததென்ன?

செங்கல்பட்டு அருகே உள்ள திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (30). இவர் ஏ பிளஸ் ரௌடி. சிறையிலிருந்து வெளியில் வந்த அசோக்கை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அசோக் தலைமையிலான ரௌடி டீம், தி.மு.க பிரமுகர் ஒருவரைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதோடு கஞ்சா விற்பனையிலும் அதிகளவில் ஈடுபட்டு வந்தார். அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அசோக்கை கைது செய்ய போலீஸார் அவரைத் தேடிவந்தனர். அப்போது அவர் சிங்கபெருமாள் கோயில் அருகே ஆப்பூர்…

பாம்புகள் கோடையில் வீடுகளை நோக்கி படையெடுப்பது ஏன்? அதனை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்”நான் இன்று மட்டும் 5 பாம்புகளைப் பிடித்துள்ளேன். நான் பிடித்ததில் கண்ணாடி விரியன், நாகப்பாம்பு ஆகியவை நஞ்சுள்ளவை. பூனைப்பாம்பு, ஆபத்தில்லாத மிதமான நஞ்சைக் கொண்டவை. மற்ற இரண்டும் நஞ்சில்லாத பாம்புகள். என்னைப் போலவே, கோவையில் இருக்கும் பாம்பு மீட்பர்கள் சிலர் 4 அல்லது 5 பாம்புகளை மீட்டுள்ளனர். இது வழக்கத்தைவிட சற்று அதிகம்தான்.”கோவையில் 27 ஆண்டுகளாகப் பாம்புகளை மீட்கும் பணியை மேற்கொண்டு வரும் அமீன் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல் இது.பொதுவாக…

மியான்மார் நிலநடுக்கம் எதிரொலி; தாய்லாந்து பயணம் பாதுகாப்பானதா? வெளியுறவுத் துறை சொல்வது என்ன?

மியான்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 6 பகுதிகளைப் பேரிடர் பகுதி என்று ராணுவ அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் தாய்லாந்து நாட்டிலும் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மியான்மார் அவசரக்கால நிலையை அறிவித்துள்ளது. இருப்பினும் தாய்லாந்தின் துணைப் பிரதமர் அனுடின் சார்ன் விரகுல், எந்த அவசரக்கால நிலையும் அறிவிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.தாய்லாந்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்தால், அண்டை நாடான லாவோஸ், வங்கதேசம், சீனாவின் யுன்னான், குவாங்சி மாகாணங்கள், வடக்கு வியட்நாம் மற்றும் மேற்கு…

CSK vs RCB: தோனியின் சிக்சர்களாலும் தடுக்க முடியாத சிஎஸ்கேயின் வரலாற்றுத் தோல்வி

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது முறையாக 9-ஆவது இடத்தில் களமிறங்கினார் தோனி28 மார்ச் 2025, 12:37 GMTபுதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தோனி களமிறங்கி சிக்சர்களையும், பவுண்டரிகளையும் அடித்த போதும் சிஎஸ்கே அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.சேப்பாக்கம் மைதானத்தில் 2008-க்குப் பிறகு முதன் முறையாக ஆர்சிபி அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வியடைந்துள்ளது.…

கிரிக்கெட்டர் முதல் ஐடி ஊழியர் வரை – உயர் ரக போதை பொருளால் கோவையை கலங்கடித்த நெட்வொர்க்! | Coimbatore police secured important drug network

கால் டாக்ஸி தொழில் செய்து வரும் பி.காம் பட்டதாரி மணிகண்டன், ரேபிடோ ஓட்டுநர் விநாயகம், ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பி.எஸ்சி பட்டதாரி கிருஷ்ணகாந்த், பி.இ பட்டதாரியும், கிரிக்கெட்டருமான மகாவிஷ்ணு, பி.இ பட்டதாரியும், சுய தொழில் செய்பவருமான ஆதர்ஷ்,  பி.காம் பட்டதாரியும்,உயர் ரக போதை பொருள்உணவு தொழில் செய்து வருபவருமான ரிதேஷ் லம்பா, பி.பி.எம் பட்டதாரியும் ஜவுளி வர்த்தகருமான  ரோஹன் ஷெட்டி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மகாவிஷ்ணு என்பவர் பெண் காவல் உதவி…

1 234 235 236 237 238 531